Budget 2025: ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்... நீட்டிக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்!

ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Feb 1, 2025 - 16:00
Feb 1, 2025 - 16:02
 0
Budget 2025: ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்... நீட்டிக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்!
ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்

2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாக கொண்ட ஜல் ஜீவன் திட்டம், 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்காக, தனித்தனி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், வளர்ச்சியடைந்து வரும் நகரங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நகர்ப்புற நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி பணியாளர்களின் நலனுக்காக, இலவச இன்சூரன்ஸ் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2047ம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகா வாட் மின்சார உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2033ம் ஆண்டுக்குள் புதிதாக 5 அணுஉலைகள் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

உதான் திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 4 கோடி விமான பயணிகளை கையாளும் வகையில், 120 விமான வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுற்றுலா தலங்களை மக்கள் எளிதில் அணுகும் வகையில், புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதேபோல், சாலையோர வியாபாரிகளுக்கு, UPI இணைந்த கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow