ஓலா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்கள்

ஓலா நிறுவனம் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நான்கு புதிய வகை எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nov 28, 2024 - 05:59
Nov 28, 2024 - 06:30
 0
ஓலா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.. ஆச்சர்யத்தில் வாடிக்கையாளர்கள்
ஓலா நிறுவனம் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக 4 புதிய வகை எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது

பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக தற்போது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு, காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு, குறைந்தபட்ச மின் நுகர்வு போன்ற காரணங்களால் ஏராளமான மக்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனினும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள ஓலா நிறுவனம் 40 ஆயிரம் ரூபாய்க்கு நான்கு புதிய வகை எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை தற்போது அறிமுக்கப்படுத்தியுள்ளது. அதன்படி, ஓலா கிக் (Ola Gig) வாகனம் 39 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், ஓலா கிக் பிளஸ் (Gig+) 49 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், ஓலா எஸ்1 இசட் (Ola S1 Z) 59 ஆயிரத்து 999-க்கும், ஓலா எஸ்1 இசட் பிளஸ் (Ola S1 Z+) 64 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் விற்பனையானது அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடங்கப்படும் என்றும் தற்போது 500 ரூபாயை முண்பணமாக கொடுத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான வாகனங்களை புக் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓலா கிக் (Gig) வாகனமானது அருகாமையில் உள்ள அலுவலகத்திற்கு செல்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இருசக்கர வாகனத்தில் 25 கிலோ மீட்டர் வேகத்தில் 112 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

இதேபோன்று ஓலா கிக் பிளஸ் (Gig+) வாகனத்தில் 45 கிலோ மீட்டர் வேகத்தில் 157 கிலோமீட்டர் வரையும், ஓலா எஸ்1 இசட்டில் (Ola S1 Z) 75 கிலோ மீட்டர் வேகத்தில் 146 கிலோ மீட்டர் தூரம் வரையும் பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வகையான வாகனங்களுக்கும் இரண்டு பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓலா நிறுவனம் மலிவான விலையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்திருப்பது ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ஒரு தரப்பினர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பொதுவாகவே அதிகமாக பழுதாகும் வாகனங்களில் ஓலா எலட்ரிக் இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த விலை மலிவான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் என்ன நிலையில் இருக்கும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர், ஓலாவின் பேட்டரியின் விலை மட்டும் 90 ஆயிரம் என தெரிவித்ததை அடுத்து, ஸ்கூட்டரை சுத்தியலால் உடைத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow