Black Friday Sale: உயர்ரக போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள்.. Filkart-இல் ஐபோன் விலை எவ்வளவு..?
ஃபிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலில் உயர்ரக போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுவதால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிரபல ஆன்லைன் தளமான ஃபிளிப்கார்ட் (Flipkart) இ-காமர்ஸில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த தளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள் என பல வகையான பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. தற்பொழுது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இத்தளங்கள் மூல நொடிப் பொழுதில் வாங்கி வருகின்றனர்.
இப்படி ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஃபிளிப்கார்ட் அவ்வப்போது பல தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பிளாக் ஃப்ரைடே (Black Friday) சேல் தொடங்கியுள்ளது. இந்த சலுகையானது கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 29-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில், பிளாக் ஃப்ரைடே சேலை முன்னிட்டு தற்போது மொபைல் போன்களுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்களுக்கு பிடித்தமான மொபைல் போன்களை வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ஜெட்டில் வாங்கும் நிலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் வாங்குவது என்பது தற்போது அனைத்து இளைஞர்களின் கனவாக உள்ளது. அந்த போனை வைத்திருந்தாலே ஒரு சிறப்பு அந்தஸ்து கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் உலா வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் ஐபோனை வாங்குவதை இளைஞர்கள் தங்கள் லட்சியமாக வைத்துள்ளனர். இவ்வாறு ஆப்பிள் ஐபோன் மீது உயிரையே வைத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அட்டகாசமான சலுகையை ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ளது.
அதன்படி, மார்க்கெட்டில் 69 ஆயிரத்து 900-க்கு விற்கப்படும் ஆப்பிள் ஐபோன், பிளாக் ஃப்ரைடே சேலில் 58 ஆயிரத்து 249-க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையால் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அடுத்ததாக சாம்சங்கின் புதிய வரவான கேலக்ஸி Z பிலிப் 6 (Samsung Galaxy Z Flip6) ஃபோல்ட் (Fold) மாடல் போன் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்நாப் டிராகன் 8 ஜென் 3 புராசஸர் (Snapdragon 8 Gen 3 Processor) மற்றும் 12 ஜிபி ரேம் கொண்ட இந்த போனாது மார்க்கெட்டில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் பிளாக் ஃப்ரைடே சேலில் ஒரு லட்சத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24+) மாடலானது மார்க்கெட்டில் 99 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளாக் ஃப்ரைடே சேலில் 64 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த போன்கள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதமாக User Friendly-யாக ஒரு போன் வேண்டும் என்று விரும்பினால், அதற்கும் ஒரு ஆப்ஷனை பிளிப்கார்ட் பிளாக் ப்ரைடே சேல் அறிவித்துள்ளது.
அதாவது, அட்வான்ஸ் தொழில்நுட்பம் மற்றும் கச்சிதமான கேமராவுடன் உருவாகியுள்ள நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) மார்க்கெட்டில் 29 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பிளாக் ப்ரைடே சேலில் இந்த போன் 27 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இந்த போன்களை வங்கி மற்றும் எக்சேஸ் ஆஃபர்ஸ் மூலம் வாங்கினால் மேலும் விற்பனை விலை குறைவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?