தட்டி கேட்ட தம்பி...வெட்டிக்கொன்ற அண்ணன்...பிள்ளைகளால் நடந்த விபரீதம்

கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mar 31, 2025 - 11:40
Mar 31, 2025 - 11:40
 0
தட்டி கேட்ட தம்பி...வெட்டிக்கொன்ற அண்ணன்...பிள்ளைகளால் நடந்த விபரீதம்
கொலை செய்யப்பட்ட நக்கலய்யா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே தளி அடுத்துள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நக்கலய்யா (36). இவர் ஒசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் தனது மனைவி நாகரத்திரா (28) என்பவருடன் தங்கியிருந்து ஒசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். 

மது போதையில் தகராறு

இவரது இரு ஆண் குழந்தைகள் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வளர்ந்து வருகின்றன. இது நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) என்பவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. குழந்தைகள் சேட்டை செய்வதாககூறி சின்னைய்யா குழந்தைகளை திட்டியுள்ளார். 

Read more: ரமலான் திருநாள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகளுக்கு...விஜய் வாழ்த்து

யுகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நக்கலய்யா தனது குழந்தைகளை அண்ணன் சின்னைய்யா திட்டுவதை அறிந்து அவரிடம் சென்று கேட்டுள்ளார். இதனால் நேற்று அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

தம்பியை கொன்ற அண்ணன்

இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை வீட்டிற்கு புகுந்த சின்னைய்யா அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் தளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். 

Read more: மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்...கலக்கத்தில் அதிமுக தலைமை

பின்னர் கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கொலையாளி சின்னைய்யாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow