ரமலான் திருநாள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகளுக்கு...விஜய் வாழ்த்து

அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என விஜய் வாழ்த்து

Mar 31, 2025 - 09:26
Mar 31, 2025 - 11:04
 0
ரமலான் திருநாள்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகளுக்கு...விஜய் வாழ்த்து
தவெக தலைவர் விஜய்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அதனடிப்படையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பார்கள்.

ரமலான் சிறப்பு தொழுகை

 ரமலான் மாதம் முதல்நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்களும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கிவருவார்கள். ரமலான் 30 நோன்பு முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையாக கொண்டாடுவர்.

Read more: தமிழகம் முழுவதும் ரமலான் கொண்டாட்டம்- சிறப்பு தொழுகை செய்து இஸ்லாமியர்கள் வழிபாடு

இதற்காக அதிகாலையில் தொழுகை முடித்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வர். பெருநாள் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஏழைக்கு உதவி செய்யவேண்டும் அடிப்படையில் பித்ர் என்னும் உதவியை வழங்கிவிட்டு தொழுகையில் ஈடுபடுவர்.

ஏராளமானோர் பங்கேற்பு

அதனடிப்படையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர். 

Read more: ‘எம்புரான்’ பட சர்ச்சை–நடிகர் மோகன்லால் வருத்தம்

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ரமலான் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் ரமலான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஆயிரக்கணக்காணோர் கலந்துகொண்டனர். 

விஜய் வாழ்த்து

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “நோன்பிருந்து உறவுகளுடன் நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும். உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow