‘எம்புரான்’ பட சர்ச்சை–நடிகர் மோகன்லால் வருத்தம்

எம்புரான் திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த நடிகர் மோகன்லால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Mar 31, 2025 - 06:34
Mar 31, 2025 - 06:57
 0
‘எம்புரான்’ பட சர்ச்சை–நடிகர் மோகன்லால் வருத்தம்
நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக  ‘எல் 2 எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

எம்புரான் சர்ச்சை காட்சிகள்

எம்புரான் திரைப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் பற்றி மறைமுகக் குறிப்பு ஆகியவற்றால் இப்படம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால் எம்புரான் திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் வலதுசாரி அமைப்புகளிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Read more: RR vs CSK: தொடர் தோல்வியில் சிஎஸ்கே... முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்!

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில்,  ஒரு கலைஞனாக எனது திரைப்படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் மற்றும் மதத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை. அந்த வகையில், எம்புரான் திரைப்படத்தால் என்னை நேசிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இத்துயரத்திற்கு நானும் படக்குழுவினரும் மனதார வருந்துகிறோம்.

காட்சிகளை நீக்க முடிவு

சர்ச்சைகுரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோரும் இந்த பதிவைத் தங்கள் பக்கத்தில் மறுபதிவிட்டுள்ளனர்.

அதேபோல், எம்புரான் படத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக கேரள மாநில சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow