சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

சென்னை துறைமுகத்தில் சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்புடைய வாசனை திரவியங்கள், காலணிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்ய்ப்பட்டுள்ளது. 

Apr 1, 2025 - 21:58
 0
சட்ட விரோகமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்.. சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் அதிரடி

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, சான்றிதழ் பெறப்பட்ட பட்டியலில் உள்ள பொருட்களை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும். அதன்படி இந்திய தர நிர்ணயம் அமைப்பு இவற்றிற்கான சான்றிதழை வழங்குகிறது. ஆனால், BIS சான்றிதழ் பெற்ற பொருட்கள் என போலியான பட்டியல் ஆவணங்களை கொடுத்து சட்ட விரோதமாக பல்வேறு வெளிநாட்டு பொருட்கள் துறைமுகங்கள் வழியாக கடத்தி வரப்படுவதாக மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைமுக சிறப்பு நுண்ணறிவு பிரிவினர் கண்காணித்து வந்தனர். 

 சென்னை துறைமுகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் வந்த இரண்டு கண்டெய்னர்களில் சோதனை செய்வதில், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக ஆவணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அதை சோதனை செய்து பார்த்தபோது ரூ.18.9 கோடி மதிப்பிலான பல்வேறு வெளிநாட்டு வாசனை திரவியங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரண்டு கண்டெய்னர்களையும் துறைமுக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இதேபோல், மற்றொரு கப்பலில் வந்த ஐந்து கண்டெய்னர்களை பரிசோதித்ததில் ரூ. 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ட்ரோன்கள், கையடக்க மின் விசிறி, ட்ரிம்மர்ஸ், விளையாட்டு பொம்மைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ரூ.26.4 கோடி ரூபாய் மதிப்பிலான 7 கண்டெய்னர்களில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்து பொருட்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தது யார்? எந்த நாட்டிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்டது? இந்த கடத்தலுக்கு பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow