நான் உயிரோடு இருக்கேனா..? இல்லையா..? சந்தேகத்தை தீர்க்க சொன்ன நித்தியானந்தா
நித்தியானந்தா இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் உயிரோடுதான் இருக்கிறேனா? இல்லையா? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா பல்வேறு இடங்களில் ஆசிரமம் அமைத்தார். பக்தி பரவசத்தில் இருந்த நித்தியானந்தாவின் ஆன்மிக சொற்பொழிவை கேட்ட பக்தர்கள் அவரை முழு முதற்கடவுளாக பூஜிக்கும் வேளையில் அவர் நடிகை ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
தொடர்ந்து, நித்தியானந்தா பெண் சீடர்களை தவறாக நடத்தியதாக பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நித்தியானந்தா மீது பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். பின்னர் கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கி உள்ளதாகவும் இந்த நாடு இந்துகளுக்கான நாடு என்றும் இங்கு தமிழக மக்கள் தொழில் தொடங்குமாறும் அழைப்பு விடுத்தார்.
நித்தியானந்தா மரணம்
கைலாசாவில் இருந்து நித்தியானந்தா தொடர்ந்து சொற்பொழிவாற்றி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவரது வீடியோக்கள் வருவது குறைந்தது. இதனால் நித்தியானந்தா ஜீவசமாதி அடைந்துவிட்டதாக வதந்தி பரவியது. ஆனால் அவர் மீண்டும் வீடியோ வெளியிட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இந்து தர்மத்தை காப்பதற்காக சுவாமி உயிர் தியாகம் செய்ததாக நித்தியானந்தாவின் உறவினர்கள் கூறிய செய்தியை கேட்டு அவரது பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில், தான் உயிருடன் இருப்பதாக நித்தியானந்தா வீடியோ வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்னமும் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். நான் வன்முறையை விரும்பாதவன். என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவது இல்லை” என்று கூறினார்.
தொடர்ந்து மற்றொரு வீடியோவில், “நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? எனக்கும் சந்தேகமாக இருக்கு. நான் உயிரோடு இருக்கேனா? இல்லையான்னு?
சமூக வலைதளங்கள், மெயின் ஸ்ட்ரீம் மீடியா எல்லாம் ஒன்றாக சேர்ந்து பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு நான் உயிரோடுதான் இருக்கேனா? இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா. எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க” என்று கூறினார்.
நான் உயிரோட இருக்கேனா? என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க pic.twitter.com/0MQvUwkH99 — KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 1, 2025
What's Your Reaction?






