இந்தியா

மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.

மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா
மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறியது. 

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று நள்ளிரவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்த்த நிலையில், பாஜக தனது பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த மசோதாவை தாக்கல் செய்தது.இதற்கு இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read more: சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற விவாதம், நள்ளிரவு 12 மணி அளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்புக்கு பிறகு நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேறியதாக அறிவிப்பு வெளியானது.

மாநிலங்களவையில்  தாக்கல் செய்யப்பட உள்ளது

மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இனி தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களவையில் தற்போது 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு பாஜகவிற்கு உள்ளது.

Read more: “ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

பாஜகவிற்கு மட்டும் 240 உறுப்பினர்கள் உள்ளனர். அதேப்போல் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். 98 பாஜக உறுப்பினர்கள் உள்பட 123 பேர் பாஜக கூட்டணியில் உள்ளனர். இதனால் 119 என்ற பெரும்பான்மையை பாஜக எளிதில் தக்க வைக்கும். ஏனென்றால் அனையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆக உள்ளது.