தமிழ்நாடு

“ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

“ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு
ரவுடி பாம் சரவணன்

சென்னை போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டவர் வடசென்னையின் பிரபல  ரவுடி பாம் சரவணன். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்ககோரி அவரது மனைவி மகாலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்

இதற்கிடையில் தான் ரவுடி பாம் சரவணன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது மனைவி மகாலட்சுமி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசி அவர்,  “என் கணவர் குண்டு காயப்பட்டு கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இரண்டு மாதம் ஆகியும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. மேலும் அவருக்கு இன்னும் ஒரு காலில் அறுவை சிகிச்சை  செய்யப்படவில்லை.இதற்கு முன்பு என் கணவருக்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள். அப்போது மருத்துவர்கள் அடுத்த வாரம் அழைத்து வாருங்கள்.காலில் முக்கியமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று  கூறியிருந்தார்கள்.

Read more :ராட்வீலர் நாயை ஏவிவிட்ட உரிமையாளர்.. நிர்வாணமாக ஓடிய முதியவர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

ஆனால் இன்று வரை அறுவை சிகிச்சை செய்யாமல் இன்று கூட முறையாக சிகிச்சை அளிக்காமல் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். இதை நான் பெரிய குற்றச்சாட்டாக முன்வைக்கின்றேன். காலில் குண்டு காயம் பட்ட ஒரு நோயாளி இரண்டு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் எந்த பலனுமில்லை. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்பதை பற்றி கேள்வி கேட்டால், எங்களுக்கு மேல் இடத்திலிருந்து அழுத்தம் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

காவலர்கள் இல்லை என்று கூறுகிறார்கள்

அந்த அழுத்தம் காவல்துறை அதிகாரிகள் மூலமாகவா.?அரசியல்வாதி  மூலமாகவா.? என்பது எங்களுக்கு தெரியவில்லை. அந்த அளவிற்கு எந்த தவறும் அவர் செய்யவில்லை. இனி இதுபோன்று எதுவும் நடக்காது என்று தெளிவாக கூறிய பிறகும், அடிப்படை சிகிச்சை கூட செய்யவில்லை என்பது வேதனை அளிக்கிறது. சிறையில் குண்டு காயம்பட்டு இருக்கும் கைதிகள் மிகவும் குறைவு தான். ஆனால் இரண்டு மாதங்களாக எங்களை பரிசோதனைக்கூட கூட்டி வரவில்லை. அவர் காலில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடு ஒன்றை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அது செப்டிக் ஆன பிறகுதான் மருத்துவமனைக்கு கூட்டி வந்தார்கள்.

Read more: IPL2025: சொந்த மண்ணில் முதல் தோல்வியை தழுவிய RCB.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

கடந்த மாதம் 1 தேதியும், 6 தேதியும் நீதிமன்றத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு உத்தரவு வந்தது.ஆனால் கணவரை 15ஆம் தேதியில் தான் அழைத்து வந்தார்கள். சிறைத்துறையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எத்தனை முறை இதுகுறித்து மனு அளித்தாலும் ஆயுதப்படை காவலர்கள் யாரும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். அவசர உதவிகளுக்கு கூட சிகிச்சை செய்ய முடியாமல் புழல் சிறைச்சாலை உள்ளது"  என குற்றம்சாட்டினார்.