ஐபிஎல் 2025

IPL2025: சொந்த மண்ணில் முதல் தோல்வியை தழுவிய RCB.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. 

IPL2025: சொந்த மண்ணில் முதல் தோல்வியை தழுவிய RCB.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!
IPL2025: சொந்த மண்ணில் முதல் தோல்வியை தழுவிய RCB.. 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

2025 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 18- வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றையப் போட்டியில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.  

பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி

குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட், பில் சால்ட் களமிறங்கினர். அதிரடியாக இன்னிங்சை தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலி  ஹர்ஷத் கான் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து  7 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். கோலியை தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 4 ரன்னிலும், பில் சால்ட் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் ரஜத் படிதார் 12 ஆட்டமிழக்க, மறுமுனையில் லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்து சிராஜ் பந்துவீச்சில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 54 ரன்னில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்டியா 5 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. 

170 ரன்கள் இலக்கு

குஜராத் டைட்டன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஓப்பனர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.  கேப்டன் சுப்மன் கில் 14 ஆட்டமிழக்க, மறுமுனையில், நன்றாக விளையாடிய சாய் சுதர்சன்,  36 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ஜாஸ் பட்லர் மற்றும் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரூதர்போர்ட் களமிறங்கிய அதிரடி காட்டினர். ஜாஸ் பட்லர் அரைசதம் கடந்து 39 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களை எடுத்தார். ரூதர்போர்ட் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 30 ரன்கள் சேர்த்தார். இறுதியில், 2 விக்கெட் இழப்பிற்கு 17.5 ஓவரில் குஜராத் அணி 170 ரன்களை எளிதாக சேர்த்து வெற்றிக்கான இலக்கை எட்டியது. 

இயல்பு நிலைக்கு திரும்பிய RCB

நடப்பு தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றிப்பெற்ற ஆர்சிபி அணி, ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இன்றையப்போட்டியில், தங்களுடைய சொந்த மண்ணில் ஆர்சிபி அணியை தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து சமூகவலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மற்ற அணியின் ரசிகர்கள் ஆர்சிபி இயல்பு நிலைக்கு திரும்பியதாக மீம்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர்.

சிராஜின் அபார பந்துவீச்சு

ஆர்சிபி அணிக்கு எதிராக பந்து வீசிய சிராஜ் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.