தமிழ்நாடு

சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை

சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

சென்னையில் பெய்த திடீர் மழை – ஜில்லென்று மாறிய வானிலை
சென்னையில் பெய்த திடீர் மழை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று காலை 5.30 மணி அளவில் சென்னையில் பல்லாவரம், தி.நகர், கிண்டி, அண்ணா சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

திடீரென பெய்த மழை

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நெல்லை, தென்காசி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலையிலையே மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Read more: “ஆப்ரேஷன் பண்ணாமல் டிஸ்சார்ஜ் பண்றாங்க..”- ரவுடி பாம் சரவணனின் மனைவி குற்றச்சாட்டு

தென் இந்தியாவில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் நிம்மதி

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்படும் என மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.