TVK Vijay: திமுக, பாஜக மீது டைரக்ட் அட்டாக்... தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கொந்தளித்த விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.

Oct 28, 2024 - 02:05
 0
TVK Vijay: திமுக, பாஜக மீது டைரக்ட் அட்டாக்... தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கொந்தளித்த விஜய்!
தவெக மாநாட்டில் விஜய் பேச்சு

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு, 7 மணிக்குள் முடிவுக்கு வந்தது. 4 மணிக்கு தவெக மாநாட்டு மேடை ஏறிய விஜய், 5.26 மணிக்கு பேசத் தொடங்கினார். பேசுவதற்கு முன்பு தனது தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இருவரையும் கட்டியணைத்து ஆசிர்வாதம் பெற்ற விஜய், 6.13 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.  

ஆரம்பம் முதலே ஆவேசமாக பேசத் தொடங்கிய விஜய், ஒரு குழந்தைக்கு தனது அம்மா மீதான பாச உணர்வை வெளிக்காட்டத் தெரியாது. அதுபோல தான் ஒரு பாம்பு படமெடுத்து நிற்கும் போதும், அந்த குழந்தை தாயை பார்த்து சிரித்தது போல பாம்பையும் நினைக்கும். அதனால் பாம்பை கையில் பிடித்து விளையாட யோசிக்காது. அந்த பாம்பு தான் அரசியல், அதனை கையில் பிடித்து விளையாட எனக்கு பயம் கிடையாது. அரசியலுக்கு நாம் குழந்தை தான், கவனமாக களமாடவேண்டும். பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பது தான் நம்ம CONFIDENCE. பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும், கையில எடுக்கணும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் சீரியஸ்னஸோட கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுறதுதான் நம்ப ஸ்டைலு நம்ப ரூட்டு என்றார்.

மேலும், சில விஷயங்களில் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், இறங்கி அடித்தால் தான் நம்மை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அப்படி தோன்றியதால் அரசியலுக்கு வந்தேன், நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது. அதன்பின்னர் தான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன். வெறும் அரசியலை மட்டும் கையில் எடுக்காமல், செயல்பாடுகளில் நெருப்பாக இருப்போம்; நான் மட்டும் நன்றாக இருப்பது சுயநலம், அதனால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறினார். இதுவரை இசை வெளியீட்டு விழா மேடையில் சந்தித்தோம் இப்பொழுது அரசியல் மேடையை சந்திக்கிறோம். 

என் நெஞ்சில் குடியிருக்கும் ஒட்டுமொத்தமான உங்க எல்லாருக்கும் என்னுடைய உயிர் வணக்கங்கள். கோவமாக கொந்தளிக்கமா நேரடியா விஷயத்திற்கு வருகிறேன். அரசியல் என்றால் கோவமாக கொந்தளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதெல்லாம் எனக்கு செட் ஆகாது. அதேபோல், புள்ளி விவர புலியாக நான் கதறப் போவதில்லை, இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகளைப் பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ணவும் போறதில்லை. அதற்காக மொத்தமாக கண்ணனை மூடிக் கொண்டிருக்க போறதும் கிடையாது. இப்ப என்ன தேவை அதனை எப்படி தீர்த்து வைப்பது என யோசித்தால் போதும். அரசியலுக்கு நம்பிக்கை தருவதை கொள்கை கோட்பாடுகள் தான். அதை யாரிடம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்கள், வழிகாட்டுத் தலைவர்கள் பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார், பச்சைத் தமிழன் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியார் என அறிவித்தார். அதேநேரம், பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாம் கையில் எடுக்கப் போவது கிடையாது; எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தை தான் முக்கியம் என்றார். காமராஜர் வழிகாட்டி, இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். பெண் தலைவர்களை வழிகாட்டியாக கொண்டகட்சி தவெக தான் என்றார். 

மேலும், யாரும் நம்மை விசில் அடிச்சான் குஞ்சு என சொல்லிவிடக்கூடாது. செயல்செயல் செயல் தான் முக்கியம், செயல் தான் முக்கியம் எனக் கூறிய விஜய், வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப் போவதில்லை என்றார். நல்லது செய்ய இறங்கியாச்சு, இனிமேல் எதை பற்றியும் யோசிக்கக் கூடாது. எதிரிகள் இல்லாமல் களம் இல்லை, நமது உண்மையான எதிரி யார் என்று நாம் டிக்ளர் பண்ணிவிட்டோம். சில விஷயங்களை பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் இறங்கி அடிச்சால் தான் நம்மை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால் இப்போது இறங்கியாச்சு... இனி எதைப்பற்றியும் யோசிக்கக் கூடாது.

திருக்குறளை வைத்து கட்சி தொடங்கியபோதே நமது எதிரி யாருனு தெரிந்துவிட்டது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்போம், இதனை எப்படி ஒழிக்க முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், நமது எதிரி பிளவுவாத சக்திகளும், ஊழல் கபடதாரிகளும் தான். திராவிட மாடல் என பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்; என்னதான் மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை; திராவிட மாடல் என்ற பெயரில், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளையடிக்கும் குடும்ப, சுயநல கூட்டம் தான் நம் அடுத்த எதிரி..! என திமுக, பாஜக கட்சிகளை நேரடியாக அட்டாக் செய்தார் விஜய்.

அதேபோல், இங்கு ஜாதி இருக்கும், ஆனால் சைலன்டாக மட்டும்தான் இருக்கும். மகத்தான அரசியல் என்றால் அது மக்களுக்கான அரசியல் தான். அதேபோல் நாங்கள் தான் மாற்று சக்தி என சொல்லிக் கொண்டிருக்கும் மற்ற கட்சிகளை போல எக்ஸ்டாரா லக்கேஜாக இருக்க நான் வரவில்லை. உங்களில் ஒருவனாக இருந்து உழைப்பதே என் டார்க்கெட், ஒரு முடிவோடு தான் வந்துள்ளேன். சோறு சாப்பிட்டால் தான் பசியாறும்... சோறு என்று சொன்னால் பசியாறாது. மக்களுக்காக கொண்டுவரும் திட்டங்கள் Practical ஆன திட்டங்களாக இருக்கணும். சும்மா உதார் விடும் திட்டங்களாக இருக்கக் கூடாது. அதனால் ஒருபோதும் அரசியலில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். 

தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், அரசியல் தெளிவுத்தான் எங்களுடைய நிர்வாக செயல்முறையாக இருக்கும். Political Decency...  Political Decorum... இதெல்லாம் பார்த்துதான் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைப்பேன். இனிமேல் NO LOOKING BACK, 2026 தேர்தலில் TVK க்கு போடப்படும் ஒவ்வொரு ஒட்டும் அணுகுண்டாக மாறும். இங்கு ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடுகிறது. யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட கலரை அவர் மேலும் பூசுகிறார்கள். ஆனால் இவர்கள் அண்டர் கிரவுண்ட் டீலிங் எல்லாம் போடுகிறார்கள். 

இந்தக் கூட்டம் குடும்பமாக சேர்ந்தோ, கூட்டணி சேர்ந்தோ ஏதோ எமாற்றவோ, கொள்ளையடிக்கவோ வந்த கூட்டம் இல்ல. அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அடிபணியாதவர்களை பகையை தீர்க்கவந்த கூட்டம் அல்ல. பக்கா பிளானோடு, மக்கள் நலனோடு பவர் பக்கா திரண்டுள்ள கூட்டம். திராவிட மாடல் என சொல்லி பெரியார் பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பம் சுரண்டி கொண்டிருக்கிறது. அதேபோல் ஏ டீம், பி டீம் என பொய் பிரசாரம் செய்து படையை வீழ்த்திவிடலாம் என்று கனவில் கூட நினைத்துவிடாதீர்கள். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளவர்கள் பெண்கள் தான்.  

என் கூட பிறந்த தங்கை விந்தியா இறந்தபோது எனக்குள் ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அதில் கொஞ்சம் கூட குறையாமல் பாதிப்பை ஏற்படுத்தியது தான் தங்கை அனிதாவுடைய மரணம். தகுதி இருந்தும் தடையாய் இருக்கு இந்த நீட், அப்போ ஒரு முடிவு பண்ணேன். கல்வி மூலம் பெண்களின் வாழ்க்கையில் ஒரு நிரந்தர தீர்வை கொண்டுவர வேண்டும். எங்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பது பெண்கள் தான். எங்களது அரசியல் குறிக்கோள் எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்பது தான் என்றார். 

அதேபோல், எப்போ பார்த்தாலும் பாசிசம்.. ஒற்றுமையா இருக்குற மக்கள் கிட்ட சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினை பயத்தை காட்டி சீன் போடுறதே வேலையா போச்சு. அவங்க பாசிசம் என்றால், நீங்க என்ன பாயாசமா? என கேள்வி எழுப்பிய விஜய், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். தளபதி, தளபதி என்று ஆசையா நீங்க கூப்பிட்டாலும், என்னை கூத்தாடி என்று கூப்பிடுகிறார்கள். கூத்து இந்த மக்களோடு கலந்து ஒன்று, எம்ஜிஆர், என்டிஆர் கட்சி ஆரம்பித்த பொழுது கூத்தாடி கூத்தாடி என்றுதான் குறிப்பிட்டார்கள்.  

ஆனால் அந்த ரெண்டு கூத்தாடிகள் தான் அந்த மாநிலத்தினுடைய மக்களின் நீங்கா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திராவிடம் சினிமாவால் தான் மக்களிடம் போய் சேர்த்தது. சினிமாவில் நிறைய அவமானங்களை சந்தித்தேன்; அங்கே உச்சத்தில் இருக்கும் நேரத்தில், அதிக ஊதியத்தை உதறிவிட்டு மக்களுக்காக வந்துவிட்டேன். நான் சம்பாதித்த பணமெல்லாம் நீங்கள் கொடுத்தது தான், அதனால் உங்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன். இனி தமிழ்நாடு மக்கள் என்னை பார்த்துக்கொள்வார்கள் என நெகிழ்ச்சியாக பேசினார்.  

இறுதியாக கூட்டணி குறித்தும் ஒரு ட்விஸ்ட் வைத்த விஜய், அரசியல் பயணத்தில் நம்மை நம்பி வருபவர்களையும் நாம் அன்போடு வரவேற்க வேண்டும். அப்படி வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் சமமான அதிகாரப் பங்கு கொடுக்கப்படும் என்றார் விஜய். அதேபோல், இந்த மேடையில் விஜய் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசுகிறார், அவருக்கு என்ன பயமா..? என அரசியல் விஞ்ஞானிகள் சொல்வார்கள். இங்கே யார் பெயரையும் சொல்லி தாக்குவதற்காக வரவில்லை. யார் பெயரையும் சொல்லி அசிங்கப்படுத்த நான் இங்கு வரவில்லை, டிசெண்ட் ஆக அரசியல் செய்யவே வந்துள்ளேன். எனது அரசியல் குறிக்கோள் வாழ்றதுக்கு வீடு, வயித்துக்கு சோறு, வருமானத்துக்கு வேலை, இதுதான் எங்க அடிப்படை Agenda. இந்த மூன்றுக்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசாங்கம் இருந்தா என்ன போனா என்ன? என ஆவேசமாக தனது உரையை முடித்தார். மேலும் மாநாட்டுக்கு வந்தவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டு விடைபெற்றார் தளபதி விஜய். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow