Waqf Amendment Bill: மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

Apr 1, 2025 - 21:34
 0
Waqf Amendment Bill: மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!
மக்களவையில் நாளை தாக்கலாகிறது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா!

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வக்ஃபு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில்,  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக கூட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். 

இந்த மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், வக்ஃபு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு, பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 4 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. எம்பிக்கள் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் அனைவரும் முழுமையாக அவையில் இருக்க வேண்டுமென பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே வக்ஃபு திருத்த மசோதாவிற்கு எந்த சூழ்நிலையிலும் ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என்று, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிகள் மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்களுக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow