IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி 

MI vs KKR:  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மும்பை அணியின் இளம் அறிமுக வீரர் அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். 

Apr 1, 2025 - 00:59
Apr 1, 2025 - 01:59
 0
IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி 
IPL 2025: கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி 

2025 ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  நடப்பு தொடரில் ஒரு வெற்றிக்கூட பெறாத நிலையில், இன்றையப்போட்டியில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் இடம் பெற்றது. 

ஆல் அவுட் ஆன கொல்கத்தா

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சுனில் நரைன் போல்ட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ரஹானே களமிறங்கினார். அடுத்து டி காக் 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், தீபக் சாகரின் பந்துவீச்சில் அஷ்வானி குமாரிடம் கேட்ச்  கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ரஹானே 11 ரன்களில்  அஷ்வானி பந்து வீச்சில், திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து களமிறங்கிய  கொல்கத்தா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு கொல்கத்தா அணி ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக அஷ்வானி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர், ஹர்திக், போல்ட் மற்றும் விக்னேஷ் புதூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

13 ஓவரில் இலக்கை எட்டிய மும்பை

117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் ஜோடி வெற்றியை நோக்கி ஆட்டத்தை தொடங்கினர். இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரோகித் 12 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரிக்கல்டன் அரைசதம் அடித்தார். வில் ஜேக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இறுதிவரை களத்தில் இருந்த ரிக்கல்டன் 41 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களை சேர்த்தார். ரிக்கல்டனுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களை சேர்த்தார். இறுதியில், 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனில், மும்பை அணிக்கு இந்த போட்டி முதல் வெற்றியாக அமைந்துள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow