ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை.. மனைவி செயலால் சஸ்பெண்டான போலீஸ்
ரீல்ஸ் மோகத்தில் நடுரோட்டில் நின்று போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மனைவி வீடியோ எடுத்ததால் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் தற்போது இன்ஸ்டாகிராம் (Instagaram), பேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைதள பயன்பாட்டில் அதிக ஈடுபாடு காண்பித்து வருகின்றனர். அதிலும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிடுவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் ரயில் தண்டவாளம், மேம்பாலம் போன்ற ஆபத்தான பகுதிகளில் நின்று வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதில், வரும் லைக்குகளை காண்பதில் அவர்களுக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி உள்ளதாக கூறப்படுகிறது.
காவலர் சஸ்பெண்ட்
அந்தவகையில், சண்டிகர் மாநிலம் குருத்வார் செளக் செக்டார் 20 பகுதியில் ஜோதி என்ற பெண் சாலையின் நடுவில் நின்று ரீல்ஸ் செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சத்தீஸ்கர் செக்டர் 34 காவல் நிலையத்தில் ஜஸ்பிர் என்ற காவலர் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், குருத்வார் செளக் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில், காவலர் அருண் குண்டு என்பவரின் மனைவி தான் ஜோதி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, ரீல்ஸ் செய்த ஜோதி மற்றும் வீடியோ எடுத்த அவரது உறவினர் பெண் மீது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பது மற்றும் பொது பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இவர்கள் இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். இந்நிலையில், தனது மனைவி ஜோதியின் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட காவலர் அஜய் குண்டுவை காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் போக்குவரத்திற்கு மனைவி இடையூறு விளைவித்தார் என்பதற்காக கணவனை சஸ்பெண்ட் செய்வது நியாயமல்ல என்று தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






