வழக்கறிஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது – விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்
வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் பிரஸ்டீஜ் மல்டி ஹோம்ஸ் பவுல்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருப்பின் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் கொலை
வீடும் இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சம்பந்தப்பட்ட பூட்டப்பட்ட வீட்டை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடனும் முகத்தில் வெட்டுப்பட்டு கத்தியுடனும் இருப்பது தெரியவந்தது.
Read more: இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கப்படும்...முன்னாள் அமைச்சர் ஆவேசம்
அழுகிய நிலையில் இருக்கும் உடலை மீட்டு விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் உள்ள வெட்டு காயங்களை வைத்து பார்க்கும்பொழுது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என தெரிய வந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளர் இடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.சேதுபதி என்பவரோடு கடந்த நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு இருந்து கூறப்படுகிறது.
கருணாஸின் முன்னாள் ஓட்டுநர்
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கொலையாளி கார்த்திக்கை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டத்திற்கு விரைந்தனர்.
வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரபரப்பு வாக்குமூலம்
கடந்த 2024ஆம் ஆண்டு நாங்குநேரியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், முக்கிய நபரின் தொடர்பு இருப்பதால் சமாதானமாக போய்விடலாம் என வெங்கடேஷ் தெரிவித்தபோதும், கார்த்திக் பதிலடி கொடுக்கனும் என கூறியதால் இருவருக்கும் பிரச்னை துவங்கி உள்ளது. அதன் பிறகு சிறு, சிறு பிரச்சனைகள் வந்த நிலையில் கார்த்திக்கிற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவில் கட்சியில் பொறுப்புத் தர வேலைபாடுகள் நடந்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக வெங்கடேஷ் செயல்பட்டு வந்ததாகவும், இதனால் பிரச்னை நிலவி வந்ததால் தீர்த்துக்கட்ட முடிவு எடுத்து வெங்கடேஷை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Read more: பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக்கொலை- 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
இருப்பினும் இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இருவரை கைது செய்த நிலையில், மற்றொருவரை பிடித்து வானகரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






