பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக்கொலை- 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

Apr 1, 2025 - 09:07
Apr 1, 2025 - 09:11
 0
பூங்காவில் வைத்து இளைஞர் வெட்டிக்கொலை- 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
கொலை செய்யப்பட்ட சந்துரு

சென்னையில் பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் சந்துரு(26). இன்டீரியர் டெக்கரேட்டராக பணியாற்றி வரும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. சந்துரு நேற்று மாலை பெரவள்ளூர் பிவி காலனி பகுதியில் சேர்ந்த பெங்கால் (30) உள்ளிட்ட சிலருடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. 

இளைஞர் கொலை

பின்னர் மதுபோதையில் நண்பர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இதனை அடுத்து சத்துரு அங்கிருந்த புறப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
சந்துரு வீட்டிற்கு வந்த சிலர் அவரை பெங்காலுடன் சமாதானம் பேசுவதற்காக வீட்டருகே உள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பெங்கால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

Read more: நீலகிரிக்கு சுற்றுலா போகிறீர்களா....அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பெரவள்ளூர் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

போலீஸ் விசாரணை 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்துக்கும்- பெங்காலுக்கும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதும், பின்னர் சந்துரு வீடு சென்ற நிலையில் பெங்கால் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து கொண்டு தனது நண்பர்கள் 5 பேருடன் சந்துரு வீட்டிற்கு சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

பின்னர் பெங்கால் சந்துருவை சமாதானம் பேச அழைத்து சென்று அருகில் உள்ள பூங்கா அருகே வைத்து வெட்டிக்கொலை செய்ததும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்கால் பெரவள்ளூரில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், கொலை வழக்கில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அருணாசலம் (20), அடையாறு பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் தமிழரசன் (27) ஆகிய இருவரை பெரவள்ளூர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பெங்கால் உள்ளிட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow