நீலகிரிக்கு சுற்றுலா போகிறீர்களா....அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்
வார விடுமுறை நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு சோதனை சாவடியில் நீலகிரி செல்லும் வாகனங்களுக்கு உயர் நீதிமன்ற உத்திரவின்படி இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச ஸ்தலங்களுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இ-பாஸ் சோதனை
இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதிகளில் நுழையும் வாகன எண்ணிக்கைகள் அதிகமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததையடுத்து, ஏற்கனவே கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வரும் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் இ-பாஸ் சோதனை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்துக்குள் சுற்றுலா தலமான நீலகிரிக்கு செல்ல நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
Read more: சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு –கொலையாளி சிக்கியது எப்படி?
இப்படி வரும் சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள கல்லாறு சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து வருகின்றதா என காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சோதனை சாவடிகளில் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று இ-பாஸ் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்கள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.6000 வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைந்துவிட்டால் தானாகவே இ-பாஸ் செயலி தனது பதிவை நிறுத்தி கொள்ளும். வார விடுமுறை நாட்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் 8000 வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் இ-பாஸ் சோதனை செய்யும் சாவடிகளில் இது TN43 நெடுஞ்சாலை தானே எனக்கூறி கொண்டு ஒரு சிலர் தங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






