சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கு –கொலையாளி சிக்கியது எப்படி?
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேஷை கொலை செய்து விட்டு தப்பியுள்ளான் கார்த்திக்.

சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் பிரதான சாலையில் பிரஸ்டீஜ் மல்டி ஹோம்ஸ் பவுல்ராஜ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. காவல்துறைக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டில் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.
வழக்கறிஞர் கொலை
வீடும் இரண்டு நாட்களாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சம்பந்தப்பட்ட பூட்டப்பட்ட வீட்டை உடைத்து சோதனை நடத்தியுள்ளனர். வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் இளைஞர் ஒருவர் கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் தலையில் வெட்டு காயங்களுடனும் முகத்தில் வெட்டுப்பட்டு கத்தியுடனும் இருப்பது தெரியவந்தது.
Read more: கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட காவலர் – மேலும் ஒருவர் கைது
அழுகிய நிலையில் இருக்கும் உடலை மீட்டு விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் உள்ள வெட்டு காயங்களை வைத்து பார்க்கும் பொழுது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் வேளச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என தெரிய வந்துள்ளது. இந்த வீட்டு உரிமையாளர் இடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.சேதுபதி என்பவரோடு கடந்த நான்கு மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு இருந்து கூறப்படுகிறது.
கருணாஸின் முன்னாள் ஓட்டுநர்
கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் மனைவி சரளா கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளி கார்த்திக்கை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டத்திற்கு விரைந்தனர். இந்த நிலையில், வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more: பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...ஊழியர்கள் பதிலால் வேதனை
தனிப்படை போலீசார் கொலையாளி கார்த்திக்கை செல்போன் டவர் மூலமாக சிவகங்கை, நாங்குநேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று தீவிரமாக தேடி வந்த நிலையில் நாங்குநேரியில் வைத்து கைது செய்துள்ளனர்.கார்த்திக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் நாங்குநேரியில் வழக்கு ஒன்றில் சிக்கி கொண்டு சிறைக்கு சென்ற பின் வெங்கடேஷ் வழக்கில் இருந்து வெளியே வரவும், சொந்த ஊரில் இருந்தால் தொடர்ந்து வழக்கில் சிக்குவாய் எனக்கூறி சென்னைக்கு அழைத்து வந்து தனக்கு ஓட்டுநராக வெங்கடேசன் உடன் வைத்துள்ளார்.
கொலையாளி கைது
விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உத்தரக்குமாரோடு வாடகைக்கு தங்கவைத்துள்ளனர். இந்த வீட்டில் மது அருந்துவது போன்றவற்றை செய்து வந்துள்ளனர். உத்தரக்குமார் இறந்த பிறகு, கார்த்திக் அந்த வீட்டில் தங்கியுள்ளார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் கார்த்திக், வெங்டேஷை பேச வேண்டும் எனவும், உணவு சமைத்து வைத்து இருப்பதாக குறி அழைத்துள்ளார்.அப்பொழுது வெங்கடேஷ் உடன் நண்பர்கள் இருவரும் சென்றுள்ளனர். இரவு 7 மணி வரை மது அருந்திவிட்டு இருவரும் சென்ற நிலையில் வெங்கடேஷ் அங்கேயே தங்கியுள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வெங்கடேஷை கொலை செய்து விட்டு தப்பியுள்ளான் கார்த்திக்.
நில விவகாரத்தில் கிடைத்த பணத்தை சரிவர பிரித்து கொடுக்காததால் கொலை நடைப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினால் முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






