கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட காவலர் – மேலும் ஒருவர் கைது
உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 5வது குற்றவாளியை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர் கடந்த 27-ஆம் தேதி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதில் காவலருடன் வந்த அவரது உறவினரான ராஜாராம் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை வழக்கில் கைது
இந்த வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் கடந்த 29-ஆம் தேதி தேனியில் வைத்து பி.சி.பட்டியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர். தொடர்ந்து பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஸ்வரன் என்ற மூவரை கைது செய்து 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read more: பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...ஊழியர்கள் பதிலால் வேதனை
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐந்தாவது குற்றவாளியான நாவார்பட்டியைச் சேர்ந்த பிரதாப் என்பவரை உசிலம்பட்டி தனிப்படை போலீசார் இன்று இராஜபாளையம்-ஸ்ரீவில்லிப்புத்தூர் இடையே காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






