கன்னியாகுமரி பத்திரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழா..  பக்தர்கள் சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயில் தூக்கநேர்ச்சை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Apr 1, 2025 - 12:48
Apr 1, 2025 - 13:05
 0
கன்னியாகுமரி பத்திரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழா..  பக்தர்கள் சாமி தரிசனம்
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் தூக்க நேர்ச்சை திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெறுவது வழக்கம்.  

குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகளின் ஆரோக்கத்திற்காகவும் இந்த தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தூக்க நேர்ச்சை திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

தொடர்ந்து, 10-ஆம் திருவிழாவான இன்று பங்குனி மாத பரணியையொட்டி பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெற்று வருகிறது.

பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு கோயிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது, சுமார் 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் பொருத்தப்பட்ட வண்டியில் தூக்ககாரர்கள் பிணைக்கப்பட்டு இருப்பார்கள். 

ஒரு வில்லில் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு தூக்கக்காரர்கள் பிணைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்களின் கையில் நேர்ச்சை குழந்தைகள் வழங்கப்படும். இந்த தேரை பக்தர்கள் வடம்பிடித்து சரண கோஷத்துடன் ஆலயத்தை சுற்றி வருவார்கள்.

இந்த ஆண்டு 1,166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தூக்க நேர்ச்சையானது இன்று தொடங்கி நாளை காலை வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow