மதுரையில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது காவலர் மீது தாக்குதல் நடத்தியதால், காவல் ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்.

மதுரையில் கிளாமர் காலி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கிளாமர் காலி கொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் முத்துகிருஷ்ணன் மதுரை கல்மேடு நந்தகுமார் காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக் திருப்பூர் சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
மார்ச் 22-ம் தேதி 'கிளாமர்' கார்த்திக் என்ற காளீஸ்வரன், வெள்ளை காளி கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மதுரை வேலம்மாள் அருகே உள்ள காலி இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை பிடிக்கும் முற்பட்டபோது போலீசார் தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால் போலீசார் அவரை சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளரான சுபாஷ் சந்திரபோஸ் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த-22 ஆம் தேதி நடந்த கிளாமர் காளி கொலை சம்பவத்தை அடுத்து வேறொரு கொலைக்கு திட்டமிட்டப்பட்ட நிலையில், இந்த என்கவுன்டர் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிளாமர் காலி கொலை வழக்கு தொடர்பாக என்கவுண்டர் நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், அந்த கொலைக்கும் சுபாஷ் சந்திரபோஸுக்கும் தொடர்பு இல்லை எனவும், வேறொரு கொலை சம்பவத்தை நடத்துவதற்காக திட்டமிட்டதால் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்ய வேண்டும் என காவலர் முயற்சித்த போது என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?






