லீக்கான நடிகையின் ஆபாச வீடியோ.. வழியில்லாமல் உண்மையை உடைத்த ஸ்ருதி
நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அந்த வீடியோ குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இவரது அந்தரங்க வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் காட்டுத் தீயாய் பரவியது. அதாவது, பட வாய்ப்பிற்காக ஸ்ருதி வீடியோ கால் மூலம் ஆபாசமாக ஒருவரிடம் பேசுவது போன்று அந்த வீடியோ அமைந்திருந்தது.
இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த நடிகை இப்படி செய்கிறார். ஒரு பட வாய்ப்பிற்காக இப்படி எல்லாமா செய்வார்? என்று கூறி வந்தனர்.ஒரு தரப்பினர் இது வெறும் ஏஐ (AI) வீடியோ தான். உண்மை இல்லை என்றும் தெரிவித்து வந்தனர். இவ்வாறு ஸ்ருதியின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பூகம்பத்தை கிளப்பியது.
ஸ்ருதி நாராயணன் விளக்கம்
இந்த வீடியோ வெளியான பின்னர் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டில் (Private) போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தன் இன்ஸ்டா பக்கத்தை பப்ளிக் (Public) அக்கவுண்டிற்கு மாற்றிய அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஏஐ (AI) பெண் யார்? உண்மையான பெண் யார்? என்பது போன்று அந்த வீடியோ அமைந்திருந்தது.
தொடர்ந்து பதிவு ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், “என்னுடைய சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை பகிர்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். ஆனால், அது எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் மிகவும் வேதனையளிக்கிறது. குறிப்பாக எனக்கு இதுபோன்ற சூழலை கையாள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
நானும் ஒரு பெண் தான், எனக்கும் உணர்வுகள் இருக்கிறது. என் உணர்வுகளை நீங்கள் மேலும் மேலும் மோசமாக்குகிறீர்கள். உண்மை தெரியாமல் எந்த ஒரு விஷயத்தையும் காட்டுத் தீப்போல் பரப்பாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?






