Dhoni என்னும் ஐந்தெழுத்து மந்திரம்.. பார்த்திபன் நெகிழ்ச்சி
மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன்முதலில் சந்தித்தேன் என்று தோனியுடன் சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை ( CISF) வீரர்கள் நாட்டின் கடலோர பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத சமூகம் ஆகியவற்றை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 07 ஆம் தேதி முதல் குஜராத் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் 2 பிரிவுகளாக சைக்கிள் பேரணி நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் பேரணியில் தோனி
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சிஎஸ்ஐஎஃப் வீரர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வீரர்கள் ரயில், விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நாட்டு மக்களை பாதுகாக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்கு உள்ளதென தெரிவித்தார். சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, “பாதுகாப்பில்லாத சமூகத்தில் நமது பாதுகாப்பிற்காக சைக்கிளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடலில் தத்தளிக்கும் போது காப்பாற்றுவதற்கு தோணி வேணும், ஆனால் கிரிக்கெட்டில் இந்தியாவை காப்பாற்றுவதற்கு தோனி மட்டும் போதும் என்று பேசினார்.
சைக்கிள் பேரணியை தொடர்ந்து, சமூக வலைதளப்பக்கத்தில் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்த பார்திபன் தோனியை புழ்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,
பார்த்திபன் X தளப்பதிவு
Dhoni
ஐந்தெழுத்து மந்திரம் !
மந்திரப் புன்னகையை நேற்று தான் முதன்முதலில் சந்தித்தேன்.
தேன் : அவரது இனிமையாக பழகும் இன்முகம்.
முகம் ஒப்பனை இன்றி இருந்தது.
இருந்தது சில மணித்துளிகளே என்றாலும் இருந்தவர்களின் இதயங்களை விக்கட்டாக வீழ்த்தினார்.
வீழ்த்தியவரை வாழ்த்தி பேசிவிட்டு “I love Dhoni “ என்றேன் முழு கூட்டமும் ஆர்ப்பரித்தது.
பறித்து எறியப்பட்டது என் பாதி மரியாதை அதற்கு முந்தய தினம் அந்த மாளிகையில் இதே வார்த்தைகளை நான் உச்சரித்த போது.
போதுமான மகிழ்ச்சியுடன் கூடு திரும்பினேன்!
திரும்பிய பக்கமெல்லாம் பறவைகள் ஒலி என் அலுவலகத்தின் ஒலிபெருக்கியில்...
இவ்வாறு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோனியுடன் பங்கேற்றது குறித்து
இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






