Google pixel 9a: இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்ன ஸ்பெஷல்?

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் pixel 9a போன் மாடல் இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Mar 29, 2025 - 13:03
Mar 29, 2025 - 14:00
 0
Google pixel 9a: இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
google pixel 9a

சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மொபைல் போன் தயாரிப்பில் குதித்தது கூகுள் நிறுவனம். ஆனால், தற்போது வரை தனக்கான பிரத்யேக இடத்தை அடைய முடியாமல் திணறி வருகிறது. இதனிடையே கடந்த மார்ச் 19 ஆம் தேதி, Google pixel 9a போன் மாடலை அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம்.

ஆரம்பமே சிக்கலா?

Google pixel 9a அறிமுகப்படுத்திய போதே, “component quality" பிரச்னை எழுந்தது. இதனால் சந்தையில் விற்பனைக்கான வெளியீடு தேதியிலிருந்து பின்வாங்கியது கூகுள் நிறுவனம். ஒருவழியாக பிரச்னையினை நிவர்த்தி செய்து சந்தைக்கு கொண்டு வர உள்ளது கூகுள் நிறுவனம். அதன்படி, வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், 16 ஆம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தைவான், மலேசியா போன்ற நாடுகளிலும் Google pixel 9a சந்தைகளில் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

விலை மற்றும் சிறப்பம்சம் என்ன?

Google pixel 9a இந்திய மதிப்பில் ரூ.49,999-க்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரிஸ் (Iris), ஓபிசிடியன் (Obsidian) மற்றும் போர்சீலியன் (Porcelain) போன்ற 3 விதமான நிறங்களில் Google pixel 9a போன் வெளியிடப்பட்டுள்ளது.

  • RAM- 8 GB 
    சேமிப்புத்திறன்- 256 GB
    Display- 6.3 inch
    எடை- 185.9 கிராம்
    பேட்டரி- 5,100 mAh
    பின்புற கேமரா: Dual camera (primary sensor)- 48 MP + ultra wide lens - 13 MP
    முன்புற கேமரா: 13 MP

இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரத்திற்கு மேலாக பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்குபவர்களுக்கு 3 மாதத்திற்கு “Google one" மற்றும் "youtube subscription" இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே கிடைக்கும்?

Google pixel 9a போனை இந்தியாவில் ப்ளிப்கார்ட் இணையதளத்தின் வாயிலாக வாங்கலாம். அதேப் போல் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் க்ரோமா போன்ற முன்னணி விற்பனை நிலையங்களிலும் Google pixel 9a போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 3,000 ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Google pixel 9a மொபைல் சந்தைகளில் நல்ல வரவேற்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow