நாவில் எச்சி ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் ‘மீன் குழம்பு’.. செய்வது எப்படி?

மீன் குழம்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு என்றால் பிடிக்காதவர்களே கிடையாது. ருசியான, நாவில் எச்சில் ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வது என்பது குறித்து காணலாம்.

Mar 29, 2025 - 13:37
Mar 29, 2025 - 13:41
 0
நாவில் எச்சி ஊறும் கன்னியாகுமரி ஸ்டைல் ‘மீன் குழம்பு’.. செய்வது எப்படி?
கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

சுத்தமான மீன்

ஒரு கப் துருவிய தேங்காய்

சின்ன வெங்காயம் - 10 

தங்காளி - 1

பச்சை மிளகாய்- 2

மல்லிப்பொடி- 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி - தேவையான அளவு

நல்ல மிளகு பொடி- 2 டீஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை

மீனை நன்கு சுத்தம் செய்து ஒருபுறம் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது வெந்தயத்தை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி ஜாரில் (Mixi jar) துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் பொடி, நல்ல மிளகு பொடி ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பெரும்பாலும் மீன் குழம்பை கடாயை விட மண் சட்டியில் வைத்தால் ருசி அதிகமாகும். அதனால் மண் சட்டியை பயன்படுத்துங்கள். இல்லாதவர்கள் கடாயை பயன்படுத்தலாம்.

ஒரு மண் சட்டியில் அரைத்து வைத்த கலவையை எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு புளித் தண்ணீரை சேர்க்கவும். பின்னர், நறுக்கிய தக்காளி,  பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கலக்கவும். கலக்கிய கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்த மீன்களை போட்டு மூடி விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு கரண்டியால் குழம்பை கலக்கி விடவும்.

மீன் நன்றாக வெந்த பின்னர் வறுத்து எடுத்து வைத்திருந்த வெந்தயத்தை அரைத்து குழம்பில் போடவும். இறுதியாக கொஞ்சம் கருவேப்பிலை, தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி குழப்பை இறக்கி வைத்தால் மண மணக்கும் கன்னியாகுமரி ஸ்டைல் மீன் குழம்பு ரெடியாகிவிடும்.

இந்த மீன் குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். ஆனால், அதே மீன் குழம்பை அடுத்த நாள் சூடாக்கி சாதத்துடன் சாப்பிடும் போது தேவாமிர்தமாய் ருசிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow