மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - மதுரை ஆதினம் பேச்சு

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அரசியல் தெரிந்து பக்குவப்பட்டவர்கள் மட்டுமே அரசியலில் வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Apr 1, 2025 - 20:13
 0
மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - மதுரை ஆதினம் பேச்சு
மதுரை ஆதினம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூரில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அய்யனார் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. இன்று இக்கோயிலுக்கு வருகை தந்த மதுரை ஆதீனத்திற்கு கிராம நாட்டான்மைகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.  தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர் சன்னதி உட்பட அனைத்து பரிவார தெய்வங்களையும் வணங்கி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். 

அவருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு மரியாதை செய்து பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து கிராம மக்களுக்கு அருள்பிரசாதம் வழங்கி ஆசி கூறினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமிய விழாவான ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் வழங்கப்படும் உதவிகள் போன்று இந்துக்கள் பண்டிகைக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். விஜயின் அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு, அது குறித்து வேண்டாம்.  ஏற்கனவே பெரிய பிரச்சினையாகிவிட்டது எனவும், சினிமா, சினிமாவாகவே இருக்க வேண்டும். சினிமாவில் இருந்தவர்கள் குறிப்பாக சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி பல்வேறு தலைவர்களை நேரில் முன்னிறுத்தி கருத்துள்ள படங்களை கொடுத்துச் சென்றார். ஆனால் தற்போது வரக்கூடிய படங்கள் கருத்து இல்லாத வகையில் இருந்து வருகிறது.

அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. அதில் கடுமையாக உழைத்து அனுபவரீதியாக, மக்களின் பிரச்னைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும்.  சினிமா அரசியல் தேவையில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் வ. உ. சிதம்பரனார், காமராஜர் என அனைவரும் கடுமையாக உழைத்து அரசியலில் வந்தவர்கள். மக்களுக்காக தொண்டு செய்வதுதான் அரசியலாகும்.

வருகிற 2028 கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாடப்படும் அது அரசு நடத்தும் என்பது எங்களது நம்பிக்கை எனவும், இந்து சமய அறநிலையத்துறையாக இருக்கக்கூடிய சேகர் பாபு அதை நிச்சயம் சிறப்பாக செய்வார். என்னுடைய இயற்பெயர் பகவதி பாபு, அவருடைய பெயர் சேகர் பாபு ரெண்டு பாபு சேர்ந்து நிச்சயமாக கோயில் குத்தகைதாரர்களுக்கு ஆப்பு வைப்போம் எனவும் கலகலப்பாக பேசினார். கேரளாவில் கிறிஸ்தவர்கள் பாவமன்னிப்பு கொடுப்பதற்கு தசமதானம் என்ற அடிப்படையில் காணிக்கை பெறுகிறார்கள். ஆனால், இங்கு நமது கோவணத்தைக் கூட அவுத்து விடுவார்கள் என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow