சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் அசோக் இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர்.அசோக் அவர்களின் மனைவிக்கு இரவு நேரங்களில் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ் ஆஃப்பிற்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது.
ஆரம்பத்தில் ஹாய், நான் உங்கள் பள்ளியில் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியரின் நண்பர் என்று சாதரணமாக மெசேஜ் செய்து குறுஞ்செய்தி அனுப்பிய நபர்கள் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் பணி புரியும் பள்ளியில் இருக்கும் ஆசிரியரோடு இணைத்து ஆபாச படங்களை அனுப்பி மனரீதியில் அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதமே அசோக் அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தொடர்ந்து மனைவிக்கு தொந்தரவுகள் அதிகரிக்க காரணத்தினால், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்களை தொடர்புகொண்டு பேசியபோது ஷேக் அண்ட் சாட் என்ற செயலி மூலம் இந்த பெண்ணின் தொடர்பு கிடைத்ததாகவும், இந்த பெண்ணைப் பற்றி ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு குறுஞ்செய்திகள் அந்த செயலியில் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த செயலியில் குறுஞ்செய்தி வந்தவுடன் செல்போனை ஷேக் செய்தால் உடனடியாக அந்த குறுஞ்செய்தி மறைந்துவிடும். அந்த அடிப்படையில் பெண்ணின் செல்போன் எண்ணிற்கு மட்டுமல்லாது பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் மாமனார் உள்ளிட்டோருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை எடுத்து ஆபாசமாக சித்தரித்த அனுப்பிய நபரை கண்டுபிடிப்பதற்காக சைபர் க்ரைம் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் நம்பரை மாற்றி சந்தேகப்படும் நபர்களுக்கு மட்டும் புதிய எண்ணை கொடுக்க செய்துள்ளனர்.
அப்பொழுதுதான் வீட்டின் அருகிலேயே குடும்ப நண்பர் போல் பழகிய தனது தோழியின் கணவர் விஜயராஜ் என்பவர் இது போன்ற செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக கைது செய்யப்பட்ட நபரின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணின் பள்ளியிலேயே செவிலியராக பணிபுரிந்து நட்பாக இருந்து வந்துள்ளார். இதை எடுத்து விஜயராஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
குடும்ப நண்பராக பழகிய பெண், யாருடனும் பழகக் கூடாது என்பதற்காக வேலையை விட்டு நிறுத்தி வீட்டிலேயே இருக்க வைத்தாள் தன்னோடு மட்டும் பழகுவார் என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே ஆபாசமாக சித்தரித்து இந்த செயலியின் மூலம் அவதூறு பரப்பியதாக தெரிவித்தார்.
அவ்வாறு பரப்புவதன் மூலம் வீட்டில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் நிறுத்தி விடுவார்கள் என எண்ணியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். குடும்ப நண்பர் போல் பழகிய மனைவியின் தோழியை, ஆபாசமாக சித்தரித்தது விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, விஜயராஜன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.