தோனி ஏன் முன்னாடியே வரல?..சென்னை அணியை கிழித்தெடுக்கும் ரசிகர்கள்
நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 9-வது வீரராக தோனி களமிறங்கியதற்கு சென்னை ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐபிஎல் 18-வது சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம், 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியினை அதன் சொந்த மண்ணில் (சென்னையில்) வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி. சென்னையில் நடைப்பெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் களமிறங்கும் போது ரசிகர்கள் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பி ஆராவாரம் செய்வார்கள்.
ஆனால், நேற்றைய போட்டியில் சென்னை அணி தோற்றதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என அவரது ரசிகர்களே புலம்பி வருகிறார்கள். நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
Read more: post office: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்- மீண்டும் கைவிரித்தது அரசு
9-வது வீரராக களமிறங்கிய தோனி:
இதன் பின் களமிறங்கிய சென்னை அணி பவர் ப்ளே முடிவதற்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சீரான இடைவெளியில் மற்ற வீரர்களும் அவுட்டாகி பெவிலியன் திரும்ப மைதானத்திற்குள் சென்னை ரசிகர்கள் கப்சிப் என மெளனமாகினர். ஒருக்கட்டத்தில் இலக்கை அடைய தேவைப்படும் ரன் ரேட் ஓவருக்கு 15-க்கு மேல் சென்றது. ஆனாலும், தோனி இறங்கவில்லை.
அஸ்வின் 11 ரன்களில் அவுட்டாக 9-வது வீரராக களமிறங்கினார் தோனி. டி20 போட்டிகளில் இதற்கு முன் ஒரே ஒருமுறை தான் 9-வது வீரராக களமிறங்கியுள்ளார் தோனி. தர்மசாலாவில் நடைப்பெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி அது. அப்போது கூட முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.
தோனி களமிறங்கியது 16 வது ஓவர் (15.3). மறுமுனையில் ஜடேஜா களத்தில் இருந்தார். இன்னும் 3 ஓவர்கள் இருக்கிறது, தோனியும்-ஜடேஜாவும் அதிரடியாக விளையாடி வெற்றிப்பாதைக்கு சென்னை அணியினை அழைத்துச் செல்வார்கள் என்று நம்பியிருந்த சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதிவரை இருவரும் களத்தில் இருந்தும், 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
தோனி ரசிகர்கள் விரக்தி:
சீனியர் வீரராக, முன்னரே களமிறங்கி போட்டியின் திசையே மாற்றியிருக்க வேண்டும். எப்போதும் ஒரு 10-15 பந்துகள் இருக்கும் போது களமிறங்கி 2 சிக்ஸர்களை அடித்தால் போதும் என தோனி நினைத்திருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் விரும்பும் தோனி இது அல்ல... கடினமான நேரத்தில் அணியை வழிநடத்தி செல்லும் தோனியே தான் நாங்கள் விரும்புகிறோம் எனவும் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர். இன்னும் ஒரு படி மேலே போய், அடுத்த வருஷம் தயவு செய்து ரிட்டையர்ட் ஆயிடுங்க தோனி என ஒரு ரசிகர் கமெண்ட் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Retirement sympathy expired..
What's Your Reaction?






