நடிகர் மோகன்லால் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்...காத்திருந்த அதிர்ச்சி

காவல் ஆய்வாளருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Mar 31, 2025 - 11:03
Mar 31, 2025 - 11:04
 0
நடிகர் மோகன்லால் பாதுகாப்பிற்கு சென்ற காவலர்...காத்திருந்த அதிர்ச்சி
நடிகர் மோகன்லால் சபரிமலையில் சாமி தரிசனம்

பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.  அப்போது நடிகர் மம்மூட்டிக்காக சிறப்பு பூஜை செய்தார். இதனால் மம்முட்டிக்கு உடல் நிலை சரியில்லையா என்ற கேள்வி எழுந்தது. 

சபரிமலை தரிசனம்

மேலும் மம்முட்டி உடல்நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.ஆனால் இதற்கு மோகன்லால் மறுப்பு தெரிவித்தார். மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் மம்முட்டிக்காக சிறப்பு பூஜை செய்ததாக கூறி இருந்தார். 

Read more: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - ரூ.67,000-ஐ தாண்டி விற்பனை

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் சபரிமலை செல்லும்போது அவரது ரசிகரான திருவல்லா காவல் ஆய்வாளர் சுனில் கிருஷ்ணா என்பவர் அன்பின் மிகுதியால் தாமாக முன்வந்து பாதுகாப்பிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியானது. 

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த நிலையில், காவல் ஆய்வாளருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் மோகன்லால் உடன் பாதுகாப்பிற்காக சென்றதே இந்த பணிடமாற்றத்திற்கு காரணம் என  கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்குமாறு பத்தினம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow