பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய அஜித் பட நடிகை.. வழக்குப்பதிவு செய்த போலீஸார்

நடிகை ஷர்மிளா தாபா மீது வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Apr 1, 2025 - 17:30
Apr 1, 2025 - 17:37
 0
பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய அஜித் பட நடிகை.. வழக்குப்பதிவு செய்த போலீஸார்
ஷர்மிளா தாபா

நேபாள நாட்டைச் சேர்ந்த நடிகை ஷர்மிளா தாப்பா, சின்னதிரை மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘விஸ்வாசம்’, ‘வேதாளம்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் நடன உதவி இயக்குநர் ரகு என்பவரை மணந்து சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

நடிகை ஷர்மிளா தாப்பா, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளுக்கு அண்ணா நகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இந்த பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் வியாசர்பாடி முகவரி கொடுத்து மீண்டும் பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளார்.

இதில் முறைகேடு இருப்பதாக நடிகை ஷர்மிளா தாப்பா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் (foreigners Regional Registration Office) தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகை ஷர்மிளா தாப்பா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read more: அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை குறைக்கும் இந்தியா.. ஹேப்பியான டிரம்ப்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow