அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை குறைக்கும் இந்தியா.. ஹேப்பியான டிரம்ப்

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவுள்ளதாக தெரிகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Apr 1, 2025 - 13:54
Apr 1, 2025 - 14:39
 0
அமெரிக்கா பொருட்கள்  மீதான வரியை குறைக்கும் இந்தியா.. ஹேப்பியான டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் சமீபத்தில் தங்கள் நாடு மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த வரி விதிக்கும் நடவடிக்கையானது ஏப்ரல் 2-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா பரஸ்பர வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் உலக நாடுகள் சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்க துவங்கி விடும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

வரியை குறைக்கும் இந்தியா

இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஏப்ரல் 1) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை இந்தியா கணிசமாக குறைக்கவுள்ளதாக கேள்விப்பட்டேன். இதனை ஏன் இவர்கள் முன்பே செய்யவில்லை? என்று நான் கூறினேன்.

இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் சீனா பக்கம் திரும்புவது குறித்து நான் கவலைப்படவில்லை. இந்த வரி விதிப்பு அவர்களுக்கு குறிப்பிட்ட வகையில் உதவக்கூடும். இதன் மூலம் பலர் அமெரிக்கா பொருட்கள் மீதான தங்களது வரிகளை குறைப்பார்கள். ஏனெனில் அமெரிக்கா மீது பல வருடங்களாக நியாயமற்ற முறையில் அவர்கள் வரி விதித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் கரோலின் லீவிட் பேசியதாவது, “நாளை (ஏப்ரல் 2) அமெரிக்காவில் விடுதலை நாளாக இருக்கும். பல தசாப்தங்களாக அமெரிக்கா மீது நியாமற்ற முறையில் வரி விதித்து வரும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முறையை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிக்க உள்ளார். இவை அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்கள் நலனுக்காவே அதிபர் செய்கிறார்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow