Kalki Box Office: ஒரே நாளில் வசூலில் தடுமாறிய கல்கி 2898 AD... பிரபாஸ் & கோ அப்செட்!

பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளில் 191 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாவது நாளில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 29, 2024 - 16:05
Jul 1, 2024 - 23:30
 0
Kalki Box Office: ஒரே நாளில் வசூலில் தடுமாறிய கல்கி 2898 AD... பிரபாஸ் & கோ அப்செட்!
Actor Prabhas Movie Kalki 2898 AD 2nd Day Box Office Collection

சென்னை: நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ், பாலிவுட்டில் இருந்து அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோன் என தரமான காம்போவில் உருவாகியுள்ளது கல்கி 2898 AD. இவர்களுடன் ராஜமெளலி, துல்கர் சல்மான், ராம் கோபால் வர்மா, மிருணாள் தாகூர் ஆகியோரும் இப்படத்தில் கேமியோவாக நடித்துள்ளனர். ஆரம்பத்தில் ப்ராஜக்ட் கே என்ற டைட்டிலில் உருவாகி வந்த இந்தப் படம், பின்னர் கல்கியாக அவதாரம் எடுத்தது.  
  
பிரம்மாண்டமான பட்ஜெட், மிகப் பெரிய ஸ்டார் காஸ்டிங் ஆகியவை தான் கல்கி 2898 AD படத்துக்கு அதிக ஹைப் கொடுத்திருந்தது. அதேபோல், மேக்கிங், கிராபிக்ஸ் ஒர்க் என டெக்னிக்கலாகவும் கல்கி திரைப்படம் தரமான ட்ரீட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனை ஏமாற்றாத வகையில் கல்கி திரைப்படம் உருவாகியுள்ளதாக ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், படத்தின் ஹீரோவே அமிதாப் பச்சன் தான் என்றும், பிரபாஸ் கேமியோ மாதிரி வந்து போவதாகவும் விமர்சித்துள்ளனர். முக்கியமாக க்ளைமேக்ஸில் இரண்டே சீன்களில் வரும் கமல்ஹாசன் செம்ம கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார். 

இதனால் கல்கி இரண்டாம் பாகத்தில் கமலின் என்ட்ரி வேற லெவலில் இருக்கும் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான கல்கி 2898 AD, முதல் நாளில் 191.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. இதுகுறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்தது. இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் கல்கி படத்தின் கலெக்ஷன் தாறுமாறாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது கிடைத்துள்ள பாக்ஸ் ஆபிஸ் தகவல்களின் படி, இரண்டாவது நாளில் வெறும் 54 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாம். இது இந்தியளவிலான கலெக்ஷன் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேநேரம் உலகளவில் பார்த்தாலும் 100 கோடிக்கு குறைவாகவே வசூல் செய்திருக்கும் எனத் தெரிகிறது. ஆகமொத்தம் இரண்டு நாட்களில் கல்கி 2898 AD படத்தின் வசூல் 300 கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாளில் ரொம்பவே தடுமாறியுள்ளது கல்கி 2898 AD. இதனை எதிர்பார்க்காத பிரபாஸ் & கோ கடும் அப்செட் மோடில் உள்ளதாம். டெக்னிக்கலாக கல்கி மிரட்டலாக இருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை சொதப்பிவிட்டதாக நெகட்டிவாக விமர்சனங்கள் வந்தன. இதுதான் கல்கி 2898 AD படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறைய காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow