Raayan Box Office Collection : தனுஷின் ராயன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவுன்னு தெரியுமா..?

Raayan Tamil Movie Worldwide Box Office Collection : தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 6, 2024 - 21:57
Aug 6, 2024 - 22:17
 0
Raayan Box Office Collection : தனுஷின் ராயன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவுன்னு தெரியுமா..?
Raayan Box Office Collection

Raayan Tamil Movie Worldwide Box Office Collection : தனுஷின் 50வது படமாக வெளியான ராயனுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதேபோல், எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் தனுஷுடன் நடித்திருந்தனர். பவர் பாண்டி மூலம் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ராயன் படத்தை இயக்கினார். பவர் பாண்டி ஃபீல்குட் மூவியாக வெளியானது, ஆனால் ராயன் பக்கா கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருந்தது. 

இதனால் ராயன் படத்துக்கு(Raayan Movie) தனுஷ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் கதை, திரைக்கதையில் சொதப்பல், அதீத வன்முறை காட்சிகள் என ராயனுக்கு நெகட்டிவான விமர்சனங்களும் வந்தன. இது எல்லாம் கடந்து தனுஷ் மேக்கிங்கில் மிரட்ட, அவருக்கு பெரிய பலமாக ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் அமைந்தது. படத்தின் ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை ரசிகர்களை கூஸ்பம்ஸ் மோடிலேயே வைத்திருந்தார் ஏஆர் ரஹ்மான். அதேபோல், ‘அடங்காத அசுரன்’ பாடலில் ஏஆர் ரஹ்மானின் குரலில் வந்த ‘உசுரே நீதானே’ என்ற போர்ஷன் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.

இன்னொரு பக்கம் தனுஷின் தங்கை துர்காவாக நடித்திருந்த துஷாரா விஜயனும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி செமையாக ஸ்கோர் செய்திருந்தார். இதனால் ராயன் திரைப்படம்(Raayan Movie) இந்தாண்டின் சூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. அதுமட்டும் இல்லாமல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ்(Raayan Box Office Collection) கிளப்பில் இணைந்தது. ஆனால் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அபிஸியல் அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், ராயன் படத்தின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் படிக்க - ஆவேசம் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாகும் பாலய்யா!  

அதன்படி, தனுஷின் ராயன் திரைப்படம்(Raayan Worldwide Box Office Collection) ஒட்டுமொத்தமாக 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை சினிமா சோஷியல் மீடியா ட்ராக்கர் ராஜசேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராயன் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்(Raayan Box Office in Tamil Nadu) 65 கோடி ரூபாய் எனவும், இந்தியா தவிர மற்ற நாடுகளில் 36 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் சுமார் 25 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம் ராயன். 

இந்தாண்டு தமிழில் வெளியான படங்களில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4ம் பாகம், 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது. அதனையடுத்து விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மட்டுமே 100 கோடி வசூல் செய்திருந்தது. முக்கியமாக ரஜினியின் லால் சலாம், கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 போன்ற டாப் ஹீரோக்களின் படங்கள் படுதோல்வியடைந்தன. ஆனால், அரண்மனை 4, மகாராஜா வரிசையில் தனுஷின் ராயன்(Dhanush Raayan) இணைந்துள்ளது. அதிலும் அரண்மனை 4, மகாராஜா படங்களை விடவும் ராயன் தான் (130 கோடி) அதிகம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow