Aavesham : ஐயையோ! ஃபஹத் பாசில் கேரக்டரில் பாலய்யா..? தெலுங்கில் ரீமேக் ஆகும் ஆவேசம்!
Fahadh Faasil Movie Aavesham Telugu Remake With Nandamuri Balakrishna : மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஆவேசம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் ஃபஹத் பாசில் கேரக்டரில் பாலய்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Fahadh Faasil Movie Aavesham Telugu Remake With Nandamuri Balakrishna : மலையாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆவேசம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் பாசில் ஹீரோவாக நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மலையாளம் மட்டுமில்லாமல் கோலிவுட் ரசிகர்களும் ஆவேசம் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். கேங்ஸ்டர் ஜானரில் உருவான இந்தப் படத்தில் காமெடி ப்ளஸ் ஆக்ஷனில் வெரைட்டியாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். ஒயிட் & ஒயிட் காஸ்ட்யூம் அணிந்தபடி கோல்ட் செயின், மோதிரம், கூலர்ஸ் போட்டுக்கொண்டு பெங்களூர் தாதா கேரக்டரில் செம மாஸ் காட்டியிருந்தார்.
ஆவேசம்(Aavesham) படத்தின் இறுதிக் காட்சி வரை, ஃபஹத் பாசில் ரியல் கேங்ஸ்டர் தானா இல்லையா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தார் இயக்குநர் ஜித்து மாதவன். படம் முழுக்க ஒன்மேன் ஆர்மியாக சம்பவம் செய்த ஃபஹத் பாசில், கிளைமேக்ஸில் அதகளம் செய்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த ஆவேசம், ஓடிடியில் ரிலீஸான பின்னரும் ட்ரெண்டிங்கில் இருந்தது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ரசிகர்களிடமும் ஆவேசம் படத்துக்கு வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக்(Aavesham Telugu Remake) ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆவேசம் தெலுங்கு ரீமேக்கில் பாலய்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குத் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணா, தற்போதெல்லாம் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் ஆவேசம் படத்தின் தெலுங்கு ரைட்ஸை பாலகிருஷ்ணா வாங்கியுள்ளதாகவும், அதில் அவரே ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் வெளியானது முதல், ஆவேசம் என்ற ஹேஷ்டேல் ட்விடிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் ஆவேசம் தெலுங்கு ரீமேக்கில்(Aavesham Telugu Version) பாலகிருஷ்ணா நடித்தால் எப்படி இருக்கும் என, அவரது வீடியோ கிளிப்பிங் எடுத்து, அதில் ஆவேசம் பாடலை எடிட் செய்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். பாலய்யா பெரும்பாலும் தனது படங்களில் பிளாக் & பிளாக் அல்லது ஒயிட் & ஒயிட் காஸ்ட்யூமில் தான் நடிப்பார். அதேபோல் என்னதான் அவர் தாதா கேரக்டரில் நடித்தாலும், அதுவே காமெடியாக தான் இருக்கும். இதில் ஆவேசம் மாதிரியான படங்களில் பாலய்யாவை நடிக்க வைத்தால் கேட்கவே வேண்டாம்.
மேலும் படிக்க - அஜித் ரசிகர்களை ஏமாற்றிய பிரசாந்த் நீல்
ஆவேசம் படத்தின்(Aavesham Movie) சில ஆக்ஷன் காட்சிகளில், ஃபஹத் பாசில் சண்டையே போடாமல் தனது அடியாட்களை மட்டும் விரட்டி விரட்டி டிப்ஸ் கொடுப்பார். அந்த காட்சிகளில் தியேட்டரே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் சிரித்தனர். அதே காட்சிகளில் பாலய்யா நடித்தால் தாறுமாறாக இருக்குமோ இல்லையோ செம தமாஸாக இருக்கும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனாலும் ஆவேசம் தெலுங்கு ரீமேக் குறித்து இதுவரை அபிஸியலாக அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.
‘ஆவேசம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பாலய்யா நடிக்க உள்ளதாக தகவல்..!#kumudam | #kumudamnews | #kumudamnews24x7 | #Avesham | #viral | #Trending | #CinemaNews | #mollywood |@FAFAONLINE1 | #TeluguNews | #TeluguCinema | #Tollywood | pic.twitter.com/xAeTpvZghP — KumudamNews (@kumudamNews24x7) August 6, 2024
What's Your Reaction?