AK 64 Movie Update : “எல்லாம் மொத்தமா போச்சே..” அஜித் ரசிகர்களை ஆஃப் செய்த பிரசாந்த் நீல்... AK64 நோ சான்ஸ்!

Ajith Kumar with Prashanth Neel Combination AK 64 Movie Update : அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியில் ஏகே 64 உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதற்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை என்பதாக பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் படம் பற்றி லேட்டஸ்ட்டாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 5, 2024 - 22:09
Aug 6, 2024 - 10:31
 0
AK 64 Movie Update : “எல்லாம் மொத்தமா போச்சே..” அஜித் ரசிகர்களை ஆஃப் செய்த பிரசாந்த் நீல்... AK64 நோ சான்ஸ்!
Ajith Kumar with Prashanth Neel Combination AK 64 Movie Update

Ajith Kumar with Prashanth Neel Combination AK 64 Movie Update : அஜித் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. அதன்படி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி, இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸை விடவும், அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தது ஏகே 64 அப்டேட்டை தான். இந்தப் படம் பற்றி கடந்த சில தினங்களாக வெளியான அப்டேட்கள் கோலிவுட்டையே அதிர வைத்திருந்தது. 

கேஜிஎஃப், சலார் படங்கள் மூலம் பான் இந்தியா அளவில் மாஸ் காட்டிய பிரசாந்த் நீல் தான், அஜித்தின் ஏகே 64(AK 64) படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இது கேஜிஎஃப் 3ம் பாகமாகவோ அல்லது அந்தப் படத்திற்கான லீட்-ஆகவோ இருக்கும் என சொல்லப்பட்டது. ஏகே 64 மட்டுமில்லாமல் ஏகே 65 படத்தையும் பிரசாந்த் நீல் இயக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் தீயாக பரவின. அதேபோல், இப்படத்திற்காக அஜித்தும் இயக்குநர் பிரசாந்த் நீலும் இரண்டு முறை சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனால் அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஃபயர் விட்டு வந்தனர். அதோடு இப்போதே ஏகே 64 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கு போஸ்டர் அடித்து பொங்கல் வைத்து செலிப்ரேட் செய்தனர். இது எல்லாவற்றுக்கும் சேர்த்து வேட்டு வைப்பது போல தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டோலிவுட் ஹீரோ பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் ‘என்டிஆர்31’ படத்துக்கான பேச்சுவார்த்தை முடிந்திருந்தது. ஜூனியர் என்டிஆர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக இந்தப் படம் தாமதமாகத் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால், இது உண்மையில்லை என்றும், ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் கூட்டணி(Ajith Prashanth Neel Combo) சீக்கிரமே ஷூட்டிங் ஸ்பாட் செல்லவிருப்பதும் தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதன்படி, வரும் 9ம் தேதி என்டிஆர்31 படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூனியர் என்டிஆர் தற்போது தேவாரா படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், தேவாரா செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர், ஜான்விகபூரின் டூயட் சாங்காக உருவாகியுள்ள தேவாரா செகண்ட் சிங்கிள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க - விஜய்யின் தளபதி 69 அப்டேட்ஸ் ரெடி

தேவாரா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்து பிரசாந்த் நீல் உடன் இணைய ரெடியாகிவிட்டாராம் அவர். அதனால் அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்குவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகிவிட்டதால், அஜித் ரசிகர்கள் சோகமாகிவிட்டனர். அதைவிட அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow