Thalapathy 69: விஜய்யுடன் இணையும் பிரேமலு பிரபலம்... உறுதியானது தளபதி 69 கூட்டணி..?
விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், அதில், மலையாள பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தளபதி விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது கடைசிப் படத்தில் நடிக்கவுள்ளார். 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். இதனால் கோட் படத்தைத் தொடர்ந்து இன்னும் ஒரு மூவியில் மட்டுமே விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும், இது பொலிடிக்கல் ஜானர் மூவியாக இருக்கும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. கமலின் 233வது படத்தின் இயக்குநராக ஹெச் வினோத் கமிட்டாகியிருந்தார். அரசியல் பின்னணியில் உருவாகவிருந்த இத்திரைப்படம், கமலின் கால்ஷீட் காரணமாக ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் கமலுக்காக எழுதிய கதையை மாற்றி அதனை விஜய்யிடம் கூறி கால்ஷீட் வாங்கிவிட்டாராம் ஹெச் வினோத்.
எனவே தளபதி 69 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கிவிட்ட ஹெச் வினோத், விஜய்யுடன் நடிப்பவர்களையும் செலக்ட் செய்து வருகிறார். அதன்படி, விஜய்யுடன் பிரேமலு பட பிரபலம் மமிதா பைஜூ நடிக்கவுள்ளாராம். இவர் தளபதி விஜய்யின் தங்கை கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், மமிதா பைஜூவும் தளபதி 69ல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் மமிதா பைஜூ. மலையாளம் மட்டுமின்றி கோலிவுட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். லியோ படத்தில் விஜய்யின் தங்கையாக மடோனா செபாஸ்டின் நடித்திருந்தார். அதேபோல், தளபதி 69ல் மமிதா பைஜூ விஜய்க்கு தங்கையாக நடிக்கவுள்ளார். இவர்கள் இருவருமே மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு கேரளாவில் வெறித்தனமான ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் தொடர்ந்து தனது படங்களில் மல்லுவுட் பிரபலங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுகிறார் விஜய்.
மேலும் படிக்க - அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி லேட்டஸ்ட் அப்டேட்
தி கோட் திரைப்படம் வெளியான பிறகு தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அரசியலுக்கு வரவிருப்பதால், தளபதி 69 பக்கா பொலிட்டிக்கல் ப்ளஸ் ஆக்ஷன் மூவியாக இருக்க வேண்டும் என விஜய் ஆர்டர் போட்டுள்ளார். ஹெச் வினோத்தும் தனது படங்களில் அரசியல் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் விஜய் எதிர்பார்ப்பதை விட டபுள் ட்ரீட் கொடுக்க ஹெச் வினோத் பிளான் செய்துள்ளதாகவும், இன்னும் சில சீக்ரெட் அப்டேட்ஸ் படம் வெளியாகும் போது தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
What's Your Reaction?