Ajith AK 64 : அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியில் ஏகே 64... இதுதான் உண்மையான அப்டேட்டா... அட பாவமே!
Actor Ajith Kumar AK 64 Movie Update in Tamil : அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajith Kumar AK 64 Movie Update in Tamil : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. இதனையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் மகிழ் திருமேனி. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
குட் பேட் அக்லி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்திட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனிடையே அஜித்தின் 64வது(AK 64 Movie) படத்தை பிரசாந்த் நீல்(Prashanth Neel) இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேஜிஎஃப், சலார் படங்கள் மூலம் பான் இந்தியா சினிமாவில் புது ரெக்கார்ட் பிரேக் செய்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். கேங்ஸ்டர், மான்ஸ்டர் என ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு தனி கலர் டோன் கொடுத்ததோடு, மேக்கிங்கிலும் மிரட்டிவிடுவது இவரது ஸ்டைல்.
அதனால், பிரசாந்த் நீல்(Prashanth Neel) டைரக்ஷனில் அஜித்(Ajith) நடித்தால், அந்த மூவி தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஒருகட்டத்தில் இது உண்மை தான் எனவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் ஏகே 64 கூட்டணி குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இன்னும் அபிஸியலாக முடிவாகவில்லை என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளதாக, சினிமா சோஷியல் மீடியா ட்ராக்கர் ரமேஷ் பாலா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆனாலும், அஜித் – பிரசாந்த் நீல் காம்போ விரைவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே குட் பேட் அக்லியை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - “கோட் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டேன்” : விஜய்
சூர்யாவின் கங்குவா படத்தை முடித்துவிட்ட சிவா, அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் சொன்ன கதைக்கு அஜித் ஓக்கே சொல்லிவிட்டதாகவும், அதனை முடித்துவிட்ட பின்னர் கங்குவா 2ம் பாகத்தை இயக்க சிவா பிளான் செய்துள்ளதாகவும் தெரிகிறது. அஜித்தின் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கியுள்ளார் சிவா. இந்த காம்போவுக்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால், ஏகே 64(AK 64) இயக்குநராக சிவா கமிட்டாகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணியும் கண்டிப்பாக இணையலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Spoke to @SureshChandraa Sir regarding the news circulating about a possible #AK - Director #PrashanthNeel project..
As of now, nothing is signed..
Always wait for official sources to confirm any new #AK Sir project.. — Ramesh Bala (@rameshlaus) August 5, 2024
What's Your Reaction?






