GOAT: ”அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டேன்...’ கோட் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்து விஜய் கொடுத்த கமெண்ட்!

Actor Vijay Praised Venkat Prabhu After Watch Goat Movie : விஜய்யின் தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு விஜய் சொன்ன கமெண்ட், கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 5, 2024 - 22:36
Aug 6, 2024 - 15:38
 0
GOAT: ”அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டேன்...’ கோட் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்து விஜய் கொடுத்த கமெண்ட்!
Actor Vijay Praised Venkat Prabhu After Watch Goat Movie

Actor Vijay Praised Venkat Prabhu After Watch Goat Movie : தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் தி கோட் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனிடையே இப்படத்தின் மூன்றாவது பாடலை கடந்த சனிக்கிழமை அன்று படக்குழு வெளியிட்டது. யுவன் இசையில் ஸ்பார்க் என்ற டைட்டில் வெளியான பாடலுக்கு எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் ரீச் இல்லை. இதுவரை கோட் படத்தில் இருந்து வெளியான மூன்று பாடல்களிலும் யுவனின் மேஜிக் சுத்தமாக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முக்கியமாக, மூன்றாவது சிங்கிளில் விஜய்யின் டீ-ஏஜிங் சுத்தமாக எடுபடவில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இதற்காகவா படக்குழு அமெரிக்கா வரை சென்றது எனவும் பங்கமாக கலாய்த்து வந்தனர். இந்நிலையில், கோட் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை விஜய்க்கு போட்டுக் காட்டியுள்ளாராம் வெங்கட் பிரபு. ஏற்கனவே கோட் படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு, வெங்கட் பிரபுவை பாராட்டியிருந்தார் விஜய். இப்போது ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகிவிட்டதால், விஜய்க்காக ஸ்பெஷலாக ஸ்க்ரீனிங் செய்துள்ளது படக்குழு. இதில், விஜய், வெங்கட் பிரபு உட்பட ரொம்பவே முக்கியமானவர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

அப்போது கோட் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த விஜய், படம் முடிந்ததும் இயக்குநர் வெங்கட் பிரபுவை கட்டிப் பிடித்து ‘கலக்கிட்டயா’ என பாராட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் “அரசியலுக்கு போக வேண்டியிருப்பதால் சினிமாவில் இருந்து விலகுவதாக அவசரப்பட்டு சொல்லிட்டேன்... இல்லையென்றால் இன்னொரு படத்தில் உன்னுடன் இணைந்திருப்பேன்..” எனக் கூறினாராம். இதனைக் கேட்டு இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாகத்தில் இருந்தாலும், ஸ்பார்க் பாடலில் விஜய்யின் டீ-ஏஜிங் பற்றிய நெகட்டிவான ட்ரோல்களை நினைத்து கொஞ்சம் உஷாராகிவிட்டாராம்.

மேலும் படிக்க - இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய மஞ்சும்மல் பாய்ஸ் டீம் 

அதன்படி, ஸ்பார்க் பாடலில் விஜய்யின் டீ-ஏஜிங் பற்றி வெளியான நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை பார்த்து, படம் வெளியாகும் முன்னர் அதனை சரிசெய்வதற்காக ரெடியாகிவிட்டார் வெங்கட் பிரபு. கோட் டீசர், ட்ரெய்லர் உட்பட இனிவரும் அப்டேட்களில் விஜய்யின் லுக், கெட்டப் ஆகியவை எக்காரணம் கொண்டும் நெகட்டிவான விமர்சனத்துக்குள்ளாகிவிடக் கூடாது என ரொம்பவே கேர் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய் வரும் ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்து செய்து வருகிறது கோட் படக்குழு.

விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கோட் ஷூட்டிங் முடிந்ததும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ள விஜய், 2026 தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளதாக அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளதோடு, அடுத்தடுத்து அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். இதையெல்லாம் மனதில் வைத்து தான், வெங்கட் பிரபுவுடன் இன்னொரு படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக விஜய் ஃபீல் செய்துள்ளாராம். அதேநேரம் கோட் படத்தை விஜய்யே பாராட்டியுள்ளதால், ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow