Good Bad Ugly: “God bless u mamae..” செம்ம மாஸ்ஸாக வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி செகண்ட் லுக்!

குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jun 29, 2024 - 00:09
Jul 1, 2024 - 23:30
 0
Good Bad Ugly: “God bless u mamae..” செம்ம மாஸ்ஸாக வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி செகண்ட் லுக்!
Ajith’s Good Bad Ugly second look poster released now

சென்னை: விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றுள்ளார் அஜித். அவர் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துவிட்டதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த கார் சேஷிங் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இதனால் அடுத்து விடாமுயற்சி ரிலீஸ் தேதி பற்றி அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி டீம் எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளது. இதுபற்றி இன்று காலை படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தில் இருந்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.      

அதாவது குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தர லோக்கலில் அஜித் மாஸ் காட்டும் இந்தப் போஸ்டரில், “God bless u mamae..” என்ற கேப்ஷன் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது. அதேபோல் அஜித்தின் லுக் மங்காத்தா ஸ்டைலில் இருப்பதோடு, போஸ்டரின் பின்னணியும் தாறுமாறாக தெறிக்கவிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருந்தது. இப்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டர், அதனை விடவும் மாஸ் சம்பவமாக அமைந்துள்ளது. 

அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனால் தான் விடாமுயற்சி ஷூட்டிங் பிரேக் விடப்பட்டிருந்த தேதிகளில், குட் பேட் அக்லி படத்திற்காக கால்ஷீட் கொடுத்திருந்தார் அஜித். ஹைதராபாத்தில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் போர்ஷனை பெருமளவு முடித்துவிட்டாராம் ஆதிக் ரவிச்சந்திரன். விடாமுயற்சிக்காக அஜர்பைஜான் சென்றுள்ள அஜித், விரைவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். அதோடு இன்னும் இரண்டு, மூன்று ஷெட்யூல்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் முடிவு செய்துள்ளார்களாம்.  
 
இந்நிலையில், தற்போது வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர், அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த போஸ்டரை ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow