"எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு".. தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை

பாலிவுட்டின் இளம் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Feb 28, 2025 - 17:55
 0
"எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு"..  தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை
தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை

பாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘புக்லி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல், ‘அர்ஜுன் ரெட்டி’ ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘ஷெர்ஷா’ திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் இணைந்து நடித்திருந்தார்கள். அப்போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஜெய்சால்மரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் படிக்க: ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிக்க மனைவியிடம் Permission கேட்கும் நடிகர் ஆதி..!

திருமணம் முடிந்தும் இருவரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்த இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா  உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 மிகப்பிரமாண்டமாக உருவான இப்படம் ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையை பெற்றது. சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினருக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க உள்ளதாக இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதாவது தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை கியாரா அத்வானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் காலணிகளை பகிர்ந்துள்ள அவர், “எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு. விரைவில் வரவிருக்கிறது" எனக் கூறியுள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி தம்பதியினருக்கு நடிகை சமந்தா, ஷாக்குலின், ராசி கண்ணா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow