இஸ்லாமியர்கள் இந்துக்களை பார்த்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்- யோகி ஆதித்யநாத்

இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Apr 1, 2025 - 16:49
Apr 1, 2025 - 17:04
 0
இஸ்லாமியர்கள் இந்துக்களை பார்த்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்- யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சமீபத்தில் ரமலான் பண்டிகை அன்று சாலைகளில் தொழுகை மேற்கொள்ளக் கூடாது என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்திருந்தது. அதாவது, இஸ்லாமியர்கள் மசூதிகள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்றும் அதை தவிர்த்து சாலைகளில் தொழுகை மேற்கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீராட் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், சாலைகளில் தொழுகை மேற்கொள்ளும் நபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் அவர்களது  பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) இல்லாமல் புதிய பாஸ்போர்ட் பெறுவது கடினமாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தனர். 

யோகி ஆதித்யநாத் கருத்து

இந்நிலையில், இஸ்லாமியர்கள், இந்துக்களிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பதற்காக மட்டும் தான் சாலை. சாலையில் நமாஸ் செய்யக்கூடாது என்ற உத்தரவு குறித்து பேசுபவர்கள் இந்துக்களிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். 

66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பிரயாக்ராஜ் கும்ப மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இதுதான் மத ஒழுக்கம். இஸ்லாமியர்களுக்கு  பலன் வேண்டுமானால் மத ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், இஸ்லாமியர்களுக்கு எதிரான விமர்சனத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow