பெண் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அரசாணை அமலில் உள்ளது - தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசானை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Apr 1, 2025 - 16:17
 0
பெண் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் அரசாணை அமலில் உள்ளது - தமிழக அரசு  நீதிமன்றத்தில் பதில்
சென்னை உயர்நீதிமன்ற்

விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் தனது தாய் உயிரிழந்த நிலையில், அங்கன் வாடி ஊழியராக பணியாற்றிய வேலையை, கருணை அடிப்படையில், தனக்கு வழங்க வேண்டும் என்று வாய்ப்புக்கோரி அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி விக்ரமின் மனு நிராகரிக்கபட்டது.

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணை ரத்து செய்யபட்டுள்ளால், தனக்கு வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விக்ரமிற்கு 8 வாரங்களில் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கல் செய்த  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளி தரன் நேரில் ஆஜராகி இருந்தார்.

தகிழக அரசு தரப்பில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, அங்கன்வாடி பணியாளர்களாக கருணை அடிப்படையில் பெண் வாரிசுளுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என்ற அரசாணையை ரத்து செய்த உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அரசாணை இன்னும் அமலில் உள்ளது என தெரிவிக்கபட்டது. 

இதையடுத்து மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, சமூக நலத்துறை செயலாளர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். மேலும், சமூல நலத்துறை செயலாளர் ஜெயஶ்ரீ முரளிதரன் அடுத்த விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow