Gas cylinder price: வணிக சிலிண்டர் விலை குறைந்தது!
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை என்பது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்
இந்த நிலையில், ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Read more: நீலகிரிக்கு சுற்றுலா போகிறீர்களா....அப்போ இதை கட்டாயம் செய்யுங்கள்
கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.5.50 அதிகரித்து விற்பனை ஆன நிலையில், இந்த மாதம் ரூ.43.50 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர்
வணிக சிலிண்டர் கடந்த டிசம்பர் மாதம் ரூ.1980-க்கும், ஜனவரி மாதத்தில் ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும் விலை குறைந்து ரூ.1,959-க்கு, மார்ச் மாதத்தில் ரூ.1965க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், ஒரே மாதத்தில் வணிக சிலிண்டர் விலை சற்று குறைந்து தற்போது ரூ.1,921.50 ஆக விற்பனையாகிறது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
What's Your Reaction?






