IPL 2025: மும்பை சொந்த மண்ணில் முதல் வெற்றி பெறுமா? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்!
டி20 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பெறுவதற்கு போராடி வருகிறது. அதே போல் 3 முறை கோப்பைகளை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான கொல்கத்தா அணி, தங்களுடைய 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 2 பலம் வாய்ந்த அணிகளும் மோதும் போட்டி என்பதால், இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2025 ஐபிஎல் 18-வது சீசனில், 12-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு மும்பை இந்தியன் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி தங்களுடைய 2-வது வெற்றியை நோக்கி இன்றைய களம் காண்கிறது.
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகின்ற 12-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
புள்ளிப்பட்டியல்:
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் விளையாடியுள்ள 2 போட்டியிலும் தோல்வியுற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 4 இந்திய அணியின் கேப்டன்கள் இடம்பெற்றுள்ள மும்பை அணியின் தொடர் தோல்வி கடுமையான விமர்சங்களை பெற்றுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், மும்பை தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் கட்டாயத்தில் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இன்றையப்போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மும்பை அணியின் வீரர்கள் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 34 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில் மும்பை இந்தியன்ஸ் 23 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
குயின்டன் டி காக் (வி.கீ), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான், சத்தியநாராயண ராஜு.
What's Your Reaction?






