KKR vs RR: முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழாவின் 6-வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Mar 26, 2025 - 11:42
Mar 26, 2025 - 11:54
 0
KKR vs RR: முதல் வெற்றியை பதிவு செய்வது யார்?  கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இன்று மோதல்!
IPL 2025: KKR vs RR

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தன்னுடைய முதல் போட்டியில் பெங்களூரு ராயல்செலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. அந்த போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,  ராஜஸ்தான் ராயல் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டு அணிகளும் இந்த சீசனில் இன்னும் முதல் வெற்றியை பெறாத நிலையில், இன்றையப்போட்டி KKR மற்றும் RR அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இரண்டு அணிகளும் தங்களுடைய வெற்றிக்கணக்கை தொடங்குவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Read More:குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

கொல்கத்தா பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் தனி ஆளாக எதிரணிக்கு 76 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து மீளாதது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேருக்கு நேர்

ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை இரண்டு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. கொலகத்தா நைட் ரைடர்ஸ் 14, ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 2 போட்டிகள் முடிவு தெரியாத நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் மிகக்குறைவான ஸ்கோர் 81, மற்றும் மிக அதிமான ஸ்கோர் 224. இந்த இரண்டு ரெக்கார்டுகளும் ராஜஸ்தான் அணியின் வசமுள்ளது.

இரு அணிகளின் உத்தேச ப்ளேயிங் லெவன் 

இரண்டு அணிகளிலும் இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.

கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்கிய ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

பிட்ச் நிலவரம்:

கடந்த ஐபிஎல் சீசனில் பரஸ்பாரா மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், கடந்த ஒரு வருடமாக டி20 போட்டிகள் நடைபெறாத காரணத்தினால் பிட்சை சரியாக கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கும், வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. இன்றைய போட்டியில் மழையின் குறுக்கீடு இல்லாத நிலையில், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே இந்த போட்டி சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இன்று இரவு 7.30 தொடங்கும் இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நேரலையில் காணலாம். 

Read More: GT vs PBKS: அதிரடி காட்டிய கேப்டன் Shreyas.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow