தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டி.. தமிழக அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை!
தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில், தமிழக பெண்கள் கபடி அணியினர் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்த கபடி வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில், சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தில் தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைப்பெற்றது. இதில் 28 மாநிலத்தை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணி பங்கேற்றன. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணியினர் தமிழ்நாட்டிற்காக சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றனர்.
வெண்கல பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக பெண் கபடி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்,
தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கபடி கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீராங்கணைகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கபடி கழக செயலாளர் மு.வேல்முருகன் ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த பெண்கள் கபடி அணியின் கேப்டன் காய்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், தாம்பரம் சட்டமன்ற உறுபினர் எஸ்.ஆர்.ராஜா தங்களுக்கு விமானத்தில் சென்று வருவதற்காக டிக்கெட் உதவி செய்தமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இது போன்ற உதவிகள் ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வெல்ல உத்வேகமாக அமையும் என்றார். நிச்சயம் தங்கபதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம் என்றார்.
What's Your Reaction?






