நீலகிரியில் நாளை முதல் இ-பாஸ் நடைமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரியில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவித்துள்ளார். வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இ-பாஸ் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் ஒரு சில நாட்களில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிய இ-பாஸ் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி நாள்தோறும் 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் வர மட்டுமே அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் சுற்றுலா மற்றும் விவசாய தொழிலையே பொருளாதரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், மருத்துவம் மற்றும் அவசரப் பணிகள் ,சரக்கு வாகனங்கள் அரசு பேருந்துகள் போன்ற வாகனங்களுக்கு இ பாஸ் தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
What's Your Reaction?






