Gangers Trailer: நா ரெடி.. இப்ப அடி.. கலகலப்பான ‘கேங்கர்ஸ்’ டிரைலர்
சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் யாரும் எதிர்ப்பாரா வகையில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’ இம்மாதம் திரையில் வெளியாக உள்ளது. நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கேத்ரீன் தெரசா, வடிவேலு, வாணி போஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மற்றும் ஏ.சி. சண்முகம் இணைந்து தயாரித்துள்ள ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் அல்டிமேட் காமெடியுடன் வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
திரையுலகில் வடிவேலு, சுந்தர்.சி காம்போ மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல ஆண்டுகளாக திரைப்படங்களில் இணைந்து நடிக்காமல் இருந்தனர்.
தற்போது, 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






